வேங்கைவையல் வழக்கு.. வன்கொடுமை தடுப்பு கோர்ட்டிலிருந்து.. நீதித்துறை நடுவர் கோர்ட்டுக்கு மாற்றம்!

Feb 03, 2025,01:21 PM IST

புதுக்கோட்டை: வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவைக் கலந்தது தொடர்பான வழக்கு விசாரணை புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் அன்னவயல் ஒன்றியத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தினர்.




இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள காவல் துறை சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.  2023 ஆம் ஆண்டு இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. விசாரணை தொடர்ந்து வந்த நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இச்சம்பவம் முடிந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் தொடர்ந்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமல் இருந்தது. மேலும் இந்த வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டிருந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.


அதில் வேங்கைவயல்  கிராமத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் முரளி ராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோர் தான் குற்றமிழைத்தவர்கள் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மூன்று பேரும் பட்டியல் இனத்தவர்கள். தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர்கள் இந்த செயலில் ஈடுபட்டதாகவும், குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது. 


இதற்கிடையே இந்த குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதால் இதனை ஏற்க கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்தது.  பாதிக்கப்பட்ட சமூகத்தின் மீதே குற்றம் சாட்டுவது அதிர்ச்சி தருவதாகவும் விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார். ஆனால் முழுமையான விசாரணைக்குப் பிறகே, உரிய ஆதாரங்களோடுதான் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறித்த முடிவுக்கு காவல்துறை வந்திருப்பதாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்தது.


இதையடுத்து  வழக்கு விசாரணையை புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திலிருந்து நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றவும் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்திருந்தது. இந்தப் பின்னணியில் இன்று இந்த வழக்கு நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

பணமும் ரசிகர்களும்!

news

கடந்த 2 நாட்களாக சரிவில் இருந்த தங்கம் இன்று மீண்டும் உயர்வு... அதுவும் எவ்வளவு உயர்வு தெரியுமா?

news

Year in Search 2025.. அதிகம் தேடப்பட்ட சமையல் குறிப்புகள்.. ஆஹா அது இருக்கா.. சூப்பரப்பு!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருமுருகாற்றுப் படை.!!!

அதிகம் பார்க்கும் செய்திகள்