சென்னை: இளைய தளபதி விஜய் நடிக்கும் விஜய் 68 புதுப்பட பூஜை பிரசாத் ஸ்டூடியோவில் போடப்பட்டுள்ள நிலையில் படம் தொடர்பான அத்தனை பேரும் சந்தோஷமாக போட்டு வரும் ஸ்டேட்டஸ்கள் ரசிகர்களை குஷியில் மூழ்கடித்துள்ளது.
இயக்குநர் வெங்க்பிரபு, சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா என பெரும் பெரும் தலைகள் படத்தில் இருக்கும் நிலையில் நாயகி மீனாட்சி சௌத்ரிதான் செம ஹேப்பி மோடில் இருக்கிறார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் காமெடி கலந்த கதையாக விஜய் 68 படம் உருவாக உள்ளது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ஏற்கனவே விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் நடித்த மீனாட்சி சவுத்ரி தற்போது விஜய் 68 படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார்.
இப்படம் குடும்பப் பின்னணி கொண்ட கதையாகவும், இதில் நடிகர் விஜய் அப்பா மகன் என இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன. அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய்க்கு சினேகா ஜோடியாகவும் மகன் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய்க்கு மீனாட்சி சவுத்ரி ஜோடியாகவும் நடிக்க இருப்பதாக கூறுகின்றனர். விஜய்யும், சினேகாவும் ஏற்கனவே வசீகரா படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர்.
தளபதி விஜய் நடித்த லியோ படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி வெளிவர உள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இரண்டு பாடல்கள் பாடல்கள் வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் ஐந்தாம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதற்காக விஜய் ரசிகர்கள் லியோ படத்தின் வெற்றியை கொண்டாட எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில்தான் மிகவும் சிம்பிளாக விஜய் 68 படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது. இப்படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் நாளை AI ஸ்டூடியோவில் பிரம்மாண்டமான செட்டில் படமாக்க இருக்கிறது. இதற்காக மிகப்பெரிய அளவில் பிரபல தொழில்நுட்ப வல்லுனர்கள் பயன்படுத்த போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு Game began தளபதி 68 என்ற லோகோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பாகி வருகிறது. விஜய் ரசிகர்கள் இந்த மகிழ்ச்சியான செய்தியை கொண்டாடி வருகின்றனர்.
முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
Dude.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் கேமியோ ரோல்.. யார் பண்றாங்கன்னு தெரியுமா?
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 26, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
{{comments.comment}}