சென்னை: பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். 80 வயதான டெல்லி கணேஷ் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த டெல்லி கணேஷ், நேற்று நள்ளிரவில் மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்குகள் இன்று நடைபெறவுள்ளன.
டெல்லியில் பணியாற்றிய ஆரம்ப காலத்தில் நிறைய நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார் டெல்லி கணேஷ். கே. பாலச்சந்தர் இயக்கிய பட்டினப்பிரவேசம் படத்தில்தான் அவர் நடிகராக அறிமுகமானார். ஹீரோவாக, பின்னர் வில்லனாக, பிறகு காமெடியனாக, இறுதிக்காலத்தில் குணச்சித்திர வேடம் என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடித்தவர் டெல்லி கணேஷ்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள டெல்லி கணேஷ், கமல்ஹாசனுடன் அதிக படங்களில் நடித்தவர். கமல்ஹாசனும் இவரும் இணைந்து நடித்த புன்னகை மன்னன், அபூர்வ சகோதரர்கள், நாயகன், தெனாலி, மைக்கேல் மதன காமராஜன், பாபநாசம் என அனைத்துப் படங்களுமே மறக்க முடியாதவை. கமல்ஹாசனுக்கும் இவருக்குமான நடிப்பு கெமிஸ்ட்ரி மட்டுமல்ல, நட்பும் கூட மிகச்சிறப்பானது. இந்தியன் 2 வரை இவர்களது திரை நட்பும் தொடர்ந்தது.
சிந்து பைரவியில் எல்லோருடைய நடிப்பையும் தூக்கி சாப்பிடும் வகையிலான கேரக்டரை டெல்லி கணேஷுக்குக் கொடுத்திருப்பார் கே.பாலச்சந்தர். அப்படத்தில் இவருடைய நடிப்பு மட்டும் தனியாக தெரியும். பிரமாதமான வேடத்தில் வாழ்ந்திருப்பார் டெல்லி கணேஷ்.
அவ்வை சண்முகியில் இவரது வேடம் குறித்து சொல்லவே தேவையில்லை. கமல் என்ற ஜாம்பவான் ஒரு பக்கம், ஜெமினி கணேசன் என்ற இமயலை மறுபக்கம்.. நடுவில் இவர் தனி ஆவர்த்தனமே செய்திருப்பார். அட்டகாசமான கேரக்டரில் அவ்வை சண்முகியில் இவரது பங்கும் அட்டகாசமாக அமைந்திருக்கும்.
இளம் தலைமுறை நடிகர்களுடனும் இணைந்து நடித்தவர் டெல்லி கணேஷ். விஜய்யுடன் இவர் நடித்த தமிழன் படத்தில் இவரது கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டது. அதேபோல கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் விமலின் தந்தை வேடத்தில் அசத்தியிருப்பார் டெல்லி கணேஷ். கடைசி வரை நடித்துக் கொண்டிருந்தவர் டெல்லி கணேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவரான டெல்லி கணேஷ், 1974ம் ஆண்டு பசி படத்திற்காக சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருதைப் பெற்றவர் ஆவார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}