சென்னை: தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஒருவர் தன்னை எப்படியெல்லாம் பாலியல் ரீதியாக சித்திரவதை செய்வார் என்பது குறித்து முன்னாள் நடிகை செளம்யா என்பவர் கூறியுள்ள தகவல்கள் அலற வைப்பதாக உள்ளது.
மலையாளத் திரையுலகில் ஏற்பட்ட இந்த பாலியல் முறைகேடு இப்போது சூறாவளி போல ஒவ்வொரு திரையுலகையும் உலுக்கி வருகிறது. பல்வேறு நடிகைகளும், முன்னாள் நடிகைகளும் இதுகுறித்து பேச ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் நடிகை செளம்யா என்பவரும் பல்வேறு திடுக்கிடும் தகவல்களைக் கூறியுள்ளார்.
தமிழ் இயக்குநரிடம் சிக்கி எப்படியெல்லாம் தான் துயரப்பட்டோம் என்பதை அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு விவரித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:
என்னை அந்த இயக்குநர் செக்ஸ் அடிமை போல பயன்படுத்தினார். அவருடைய அடையாளத்தை இப்போது நான் வெளிப்படுத்த விரும்பவில்லை. ஆனால் கேரள போலீஸ் விசாரணையின்போது அவர்களிடம் இதை தெரிவிப்பேன்.
எனக்கு 18 வயதாக இருக்கும்போது அந்த இயக்குநர் என்னை அணுகினார். அவரும், அவரது மனைவியும் என்னை அணுகி சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி அழைத்துச் சென்றனர். அங்குதான் எனது விதி மாறியது. அந்த இயக்குநர் என்னை வைத்து பலவிதமாக தனது இச்சையை தீர்த்துக் கொண்டார். மன ரீதியாக, உடல் ரீதியாக டார்ச்சர் செய்தார். என்னை பாலியல் அடிமையாக மாற்றி விட்டார். அவருக்கு எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் என்னை பயன்படுத்தினார். என் மூலமாக குழந்தை வேண்டும் என்றும் என்னிடம் கூறுவார். சில நேரங்களில் எனது பிறப்புறுப்பில் இரும்பு ராடு கொண்டு சித்திரவதை செய்வார்.
எனக்கு சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க ஆசையாக இருந்தது. கேரளாவில் எனது வீட்டுக்கு அருகில்தான் நடிகை ரேவதியின் வீடு இருந்தது. அவரைப் பார்த்துப் பார்த்து வளர்ந்தேன். கனவுலகில் இருந்தேன். இதுதான் என்னை அந்த இயக்குநரிடம் கொண்டு போய்ச் சேர்த்து விட்டது. நான் அப்போது சிறுமி. எனக்கு உலகம் புரியவில்லை.
முதல் முறையாக நான் அவுட்டோர் ஷூட்டிங் போனபோது அவர் என்னுடன் பெரிதாக பேசவில்லை. அவரது மனைவிதான் இயக்குவதாக கூறப்பட்டது. ஆனால் முழுப்படத்தையும் இவர்தான் இயக்கினார். அவருடைய கட்டுப்பாட்டுக்குள் நான் மெதுவாக கொண்டு செல்லப்பட்டேன். எனக்குப் போகப் போக பயம் வந்தது.
என்னை அந்த இயக்குநர் பலமுறை தவறாகப் பயன்படுத்தினார். ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து , மில்க்ஷேக் வாங்கிக் கொடுத்து என்னை முதலில் தன் பக்கம் ஈர்க்க ஆரம்பித்தார். எனக்கு விவரம் தெரியவில்லை. தனது மனைவி வீட்டில் இல்லாத நாளில் வைத்து முதல் முறையாக என்னை கெடுத்து விட்டார். என்னால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை. வெட்கமாக இருந்தது. அவமானமாக இருந்தது. அழுகை வந்தது. யாரிடம் சொல்வது என்றே தெரியவில்லை. தப்பு செய்து விட்டதாக உணர்ந்தேன்.
ஆனாலும் எனது நடிப்பு ஆசையையும் என்னால் விட முடியவில்லை. அந்த நபர் கொஞ்சம் கொஞ்சமாக என்னை அதிக அளவில் தவறாக பயன்படுத்த ஆரம்பித்தார். பலமுறை கட்டாயப்படுத்தி உறவு கொள்வார். கிட்டத்தட்ட ஒரு வருடம் இந்தக் கொடுமை தொடர்ந்தது.
மலையாளத்தில் நடிக்க ஆரம்பித்த போதும் கூட எனக்கு இதே தொல்லைதான் வந்தது. என்னுடன் நடித்த நடிகர் ஒருவர் என்னிடம் சில்மிஷம் செய்தார். அவர் இப்போது ஹேமா கமிட்டியின் அறிக்கையிலும் கூட இடம் பிடித்துள்ளார். இயக்குநர்கள், நடிகர்கள், டெக்னீஷனியன்கள் என பலரும் என்னை தவறாகப் பயன்படுத்தினர்.
இந்த கொடுமையிலிருந்து நான் மீண்டு வர 30 வருடமானது. என்னைப் போல பாதிக்கப்பட்டவர்கள் உரிய முறையில் புகார்கள் கொடுக்க முன் வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}