சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படம் அக்டோபர் மாதம் தீபாவளிக்குத் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லைக்கா நிறுவனத்திற்கு இந்த வருடம் 2 தீபாவளி வருகிறது.. முதல் தீபாவளியை ஜூன் மாதம் கொண்டாடுகிறது. கமல்ஹாசன் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டப் படம் இந்தியன் 2. இப்படம் ஜூன் மாதம் திரைக்கு வருவதாக நேற்றுதான் அறிவித்தது லைக்கா நிறுவனம்.

இந்த நிலையில் இன்று அடுத்த தீபாவளிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது லைக்கா நிறுவனம். அக்டோபர் மாதம் தீபாவளிப் பண்டிகையன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தை திரைக்குக் கொண்டு வருகிறது லைக்கா. ஜெய்பீம் படத்தை இயக்கி த.செ. ஞானவேல் இயக்கியுள்ள படம்தான் வேட்டையன். இப்படத்தை தீபாவளியன்று திரையிடவுள்ளதாக லைக்கா தெரிவித்துள்ளது.
இதனால் ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். படு வேகமாக வே்ட்டையன் படப்பிடிப்பு நடந்து வந்தது. இப்படத்தின் கதை பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ள நிலையில் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது லைக்கா.

வேட்டையன் படத்தில் ராணா, பஹத் பாசில், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கதிர் உள்ளிட்டோர் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.
வேட்டையன் படப்பிடிப்பின்போது கமல்ஹாசனும், ரஜினிகாந்த்தும் சந்தித்துப் பேசிக் கொண்டது நினைவிருக்கலாம். இந்த நிலையில் இந்த வருடம் கமல் மற்றும் ரஜினியின் சூப்பர் ஹிட் எதிர்பார்ப்புப் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வரவுள்ளது. அதுவும் ஒரே நிறுவனத்தின் தயாரிப்புகளில் இரு சூப்பர் நடிகர்களும் நடித்து அது வெளியாவது இரு தரப்பு ரசிகர்களையும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்துள்ளது.
பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பீகார் தேர்தல் முடிஞ்சாச்சு.. பாஜக.,வின் அடுத்த கவனம் எங்கு தெரியுமா.. இங்கு தான்!
நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை கொடுத்த 'அசைன்மென்ட்' இது தானாமே!
புதிய காற்றழுத்த தாழ்வு.. நவம்பர் 17ம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு - வானிலை மையம்
10 ஆண்டுகளில் பாஜக.வின் அசுரத்தனமான வளர்ச்சி... யாருக்கெல்லாம் ஆபத்து?
எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி
74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!
தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)
கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!
{{comments.comment}}