"ரத்தம்" ..  ரசிகர்களுக்கு 100% திருப்தி தரும்.. விஜய் ஆண்டனியின் அனுபவம்!

Oct 03, 2023,03:43 PM IST

- வர்ஷினி


சென்னை: அக்டோபர் 6ந் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியிட தயாராக உள்ள ரத்தம் திரைப்படம் 100% திருப்தியை அளிக்கும். இப்படத்தை பார்க்கும்போது திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன் என தனது பட அனுபவத்தை நடிகர் விஜய் ஆண்டனி கூறியிருக்கிறார்.


நடிகரும், இசையமைப்பாளரும் ஆன விஜய் ஆண்டனி ரத்தம் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். தொடர்ந்து வெற்றியைப் பெற்ற இவருடைய படங்களை  அடுத்து வரும் விஜய் ஆண்டனியின் ரத்தம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது வர்த்தக வட்டாரத்திலும் அதிகரித்துள்ளது. 


அக்டோபர் 6 ந் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. தமிழ் படம் 1 மற்றும் தமிழ் படம் 2 படங்களை இயக்கிய சி .எஸ் அமுதன் ரத்தம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸின் கமல் போஹ்ரா, டி .லலிதா,  பி .பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் தயாரித்துள்ளனர் . கண்ணன் நாராயணன் இசையமைக்கிறார் .கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, படத் தொகுப்பை 

டி .எஸ் சுரேஷ் கையாண்டு உள்ளார். 


படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து விஜய் ஆண்டனி கூறியதாவது:


சி.எஸ்.அமுதனின் திறமை குறித்து எனக்கு பல வருடங்களாக தெரியும். அவர் ஸ்பூஃப் அடிப்படையிலான திரைப்படங்கள் எடுப்பதில் பிரபலமானவர் என்றாலும், வெவ்வேறு ஜானர்களில் கதையை படமாக்குவதிலும் அவர் திறமையானவர். ரத்தம் படத்தின் கதையை அவர் என்னிடம் சொன்னபோது எனக்கு உடனே பிடித்துப் போனது மற்றும்  ​​அந்தக் கதையை காட்சிப்படுத்துவதும் மிகவும் எளிதாக இருந்தது. என் கேரியரில் இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்று நான் நம்பினேன். மேலும், இது உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை நிச்சயம் ஈர்க்கும். படத்தின் இறுதி வடிவத்தைப் பார்க்கும் போது திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்.


இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது. முழு கதையும் அவர்களால் தான் நகரும். தீவிரமான அர்ப்பணிப்புடன் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் என எல்லாருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் கூட படத்திற்கு வலு சேர்க்கும். ‘ரத்தம்’ படம் பார்த்து விட்டு பார்வையாளர்கள் திரையரங்குகளை விட்டு வெளியே வரும்போது நிச்சயம் அவர்களுக்கு 100% திருப்தியைத் தரும்" என கூறினார் விஜய் ஆண்டனி.

சமீபத்திய செய்திகள்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மே 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

இன்ஜினியரிங் படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்.. தொழிற்கல்வி இயக்குனரகம்!

news

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி.. இன்று வீடு திரும்புவதாக தகவல்..!

news

தமிழகத்தில் இன்று ஒரிரு இடங்களில்.. டமால் டுமீலுடன் மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்

news

சுற்றித் திரியும் ஒற்றை யானை.. காட்டுக்குள் அனுப்ப வனத்துறை தீவிரம்.. தொட்டபெட்டா செல்ல இன்று தடை!

news

பஹல்கம் தீவிரவாத தாக்குதல்.. பிரதமர் மோடியுடன் அதிபர் புடின் பேச்சு.. இந்தியாவுக்கு ஆதரவு!

news

சபரிமலை செல்கிறார் குடியரசுத் தலைவர் முர்மு.. ஐயப்பனை தரிசிக்கப்போகும் முதல் ஜனாதிபதி!

news

செனாப் நதியின் 2 அணைகளிலிருந்து.. பாகிஸ்தான் செல்லும் தண்ணீரை.. நிறுத்தி வைத்தது இந்தியா

news

Gold rate: தங்கம் விலை ஸ்திரமற்றதாக இருக்கும்.. முதலீட்டாளர்கள் கவனமாக இருக்கவும்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்