தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு...பட்டியலை வெளியிட்ட விஜய்

Jan 09, 2026,05:27 PM IST

சென்னை : தமிழக சட்டசபை தேர்தலுக்கான பணிகளை விஜய்யின் தவெக கட்சி துவங்கி உள்ளது. இதன் முதல் கட்டமாக தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிக்காக 12 பேர் கொண்ட குழுவை விஜய் அமைத்துள்ளார். இது தொடர்பான பட்டியலை, அறிக்கையுடன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.


விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு, நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட இருக்கிறது.

இதற்காகச் சிறப்புக் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழு, தமிழகம் முழுவதும் பொதுமக்கள், சிறு, குறு தொழில் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், பொருளாதார மற்றும் தொழில் வல்லுனர்கள், வர்த்தக சபைகள், பல்வேறு ஊழியர் சங்கங்கள், விவசாயச் சங்கங்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மகளிர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் தேவைகளையும் அறிந்து, தரவுகளைப் பெறவுள்ளது.




அவர்களிடம் இருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களையும் ஒட்டுமொத்த மாநிலத்தையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் தேர்தல் அறிக்கையினைத் தயார் செய்யவுள்ளது.


தேர்தல் அறிக்கை குழு : 


1. அருண்ராஜ்

2. பிரபாகர்

3. ராஜ்மோகன்

4. திருமதி மயூரி

5. பேராசிரியர் சம்பத்குமார்

6. அருள் பிரகாசம்

7. விஜய் ஆர்.பரணிபாலாஜி

8. முகமது பர்வேஸ்

9. டாக்டர். பிரபு

10. கிறிஸ்டி பிருத்வி

11. தேன்மொழி பிரசன்னா

12. வழக்கறிஞர் சத்யகுமார்


மேற்கண்ட குழுவினருக்கு கழகத் தோழர்கள் முழு ஒத்துழைப்பு நல்வதோடு, அந்தந்தப் பகுதிகளில் சம்பந்தபட்ட அமைப்புக்களைச் சந்திக்கும் பொழுது தேவையான உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என விஜய் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?

news

ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்

news

ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!

news

"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)

news

ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!

news

MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!

news

இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!

news

வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்