சென்னை: பல பெரும் தலைகளைப் புரட்டிப் போட்டு புதிய வரலாறு படைத்து வருகிறது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். கடந்த பல வருடங்களாக இருந்து வந்த பார்முலா அரசியலை தகர்த்தெறிந்துள்ளார் விஜய் என்றுதான் சொல்ல வேண்டும்.
நான் பத்து பேரை அடிச்சு டான் ஆகலடா.. நான் அடிச்ச பத்து பேருமே டான்தான் என்று கேஜிஎப் படத்தில் வரும் வசனம் போல, தனது அதிரடியைக் காட்டியுள்ளார் விஜய்.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற பெயரைக் கேட்டாலே கிடுகிடுவென எதிர்த் தரப்பை நடுங்க வைத்தவரை புரட்டிப் போட்டுள்ளது தவெக.
MK Stalin is more dangerous than Karunanidhi என்ற வாசகத்தை கூறி வந்தவர்களையே திகைக்க வைத்துள்ளது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொளத்தூரில் ஏற்பட்டுள்ள பின்னடைவு. முதல்வர் ஸ்டாலினுக்குப் பின்னடைவு என்பதை திமுகவினர் மட்டுமல்ல, மற்ற கட்சியினர் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மிகப் பெரிய அதிர்ச்சி இது.
திமுகவின் பெரும் தலைவர்கள் பலரையும் விசில் வீழ்த்தியுள்ளது. கே.என்.நேரு இன்னொரு அதிர்ச்சி. திமுக தரப்பில் அதிரடியான செயல் வீரர்கள் பலருக்கும் பின்னடைவு என்பது பெரும் ஆச்சரியம். அதேபோல துரைமுருகன். அவரையும் விசில் வீழ்த்துகிறது.

திமுகவின் பல பெரும் தலைவர்கள் விசிலிடம் வீழ்வதைப் பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது.
மறுபக்கம் அதிமுக கடந்த தேர்தலை விட குறைந்த இடங்களில் வெல்லும் நிலைக்குப் போய் விட்டது. காரணம், விசில். பல முன்னாள் அமைச்சர்கள் தோல்வியுறும் நிலையில் உள்ளனர். கடந்த முறை வென்றதைக் கூட இந்த முறை வெல்ல முடியாத நிலையில் அதிமுக உள்ளது. விஜய்யின் வருகையால் அதிமுகவும் கூட கலங்கிப் போயுள்ளது.
இன்னொரு பக்கம் நாம் தமிழர் கட்சி. இந்தக் கட்சி தொடங்கியது முதல் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது. ஆனால் இந்தத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்குப் பெரும் சரிவை அந்தக் கட்சி சந்திப்பதாக தெரிகிறது. குறிப்பாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், காரைக்குடி தொகுதியில் 3வது இடத்தையே சீமான் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு விசில் வெற்றி வாகை சூடும் நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறது.
தேர்தலுக்கு முன்பு வரை சொல்லப்பட்டது என்னவென்றால் விஜய் தனியாக நின்றால் அது திமுகவுக்கு சாதகமாக மாறும். விஜய்க்கு 10 சதவீத அளவுக்கே வாக்குகள் கிடைக்கும். அவர் பிரிக்கப் போவது அதிமுக வாக்குகளைத்தான் என்று பலரும் கருதி வந்தனர், பேசியும் வந்தனர். குறிப்பாக திமுகவினர் மிகப் பெரிய அளவில் தைரியமாகவும் இருந்து வந்தனர்.
ஆனால் விஜய் எல்லோரையும் காலி செய்துள்ளார். திமுகவை நிலை குலைய வைத்துள்ளார். அதிமுகவை சரித்து விட்டார். சீமான் மேலும் பலவீனமாகியுள்ளார். தேமுதிக உள்பட எல்லாக் கட்சிகளையும் அவரது சூறாவளி வருகை நிலை குலைய வைத்துள்ளது.
விஜய்யின் இந்த விஸ்வரூபத்தை சத்தியமாக யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் தவெகவினர் ஆரம்பத்திலிருந்தே தங்களது அபிமான தலைவர் மீது.. அல்ல அல்ல.. "அண்ணன்" மீது அசாத்தியமான நம்பிக்கையில் இருந்து வந்தனர். அதை விஜய் தற்போது பக்காவாக நிரூபித்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஜஸ்ட் மிஸ் ஆனாரா எடப்பாடி பழனிச்சாமி?.. விஜய் ஆதரவு சுயேச்சை வாங்கிய ஓட்டுக்களைப் பாருங்க!
அதிர வைத்த எடப்பாடி பழனிச்சாமி வியூகம்.. திமுகவுக்கு 2வது இடம் கூட கிடைக்கலையே!
திராவிட மாடலுக்கு இது தோல்வியா?.. தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள்...சொல்வது என்ன?
சட்டசபையில்.. தவெக விற்கு பெரும்பான்மை கிடைக்கா விட்டால் என்ன செய்வார் விஜய்?
மேற்கு வங்கத்தில் ஆட்சியை இழக்கும் மம்தா பானர்ஜி... அதிரடி காட்டிய பாஜக முன்னிலை!
அடிச்ச பத்து பேருமே டான்தான்.. தமிழ்நாட்டு அரசியலைப் புரட்டிப் போட்ட விஜய்!
திமுகவைக் கைவிட்ட கூட்டணிக் கட்சிகள்.. ஈகோ, பிடிவாதத்தால் ஆட்சியை இழந்த மெகா கூட்டணி!
பாஜகவுக்கு ஷாக் கொடுத்த அதிமுக.. கஷ்டப்பட்டு கூட்டணி சேர்ந்தும் பலனில்லையே!
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி: பாஜக போட்டியிட்ட 27 தொகுதிகளிலும் பின்னடைவு!
{{comments.comment}}