அப்பா எஸ்ஏசி. க்கு ஆபரேஷன்.. ஓடி வந்து நேரில் பார்த்து விசாரித்த விஜய்!

Sep 14, 2023,08:22 AM IST

சென்னை : பிரபல டைரக்டரும், விஜய்யின் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சமீபத்தில் ஆபரேஷன் நடந்தது. இதனால் வெளிநாட்டில் இருந்து வந்த கையோடு, நேராக சென்று அப்பா எஸ்ஏசி மற்றும் அம்மா சோபாவை நேரில் பார்த்து நலன் விசாரித்துள்ளார் விஜய்.


நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து தனது அடுத்த படத்திற்காக அவர் தயாராகி வருகிறார். விரைவில் வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படமான தளபதி 68 படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளது. இதில் இரட்டை வேடத்தில் நடிக்க தயாராவதற்காக ஃபேஸ் ஸ்கேனிங் செய்வதற்கு அமெரிக்கா சென்றிருந்த விஜய், நேற்று தான் சென்னை திரும்பினார்.




சினிமாவில் ஒரு புறம் பரபரப்பாக நடித்து வந்தாலும் , தனிப்பட்ட வாழ்க்கையில் அப்பா எஸ்ஏசி.,க்கும் விஜய்க்கும் ஏற்பட்ட பிரச்சனை, அதனால் பல மாதங்களாக தனது பெற்றோருடன் பேசாமல் இருப்பது, அவர்கள் மீது போலீஸ் புகார் அளித்தது என பல விஷயங்கள் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. 

தனது மகன் சஞ்சய் ஜெய்சனின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள தான் விஜய் முக்கியமாக அமெரிக்கா சென்றிருந்ததாக சொல்லப்படுகிறது.  மகன் வெளிநாட்டில் படிப்பதால் விஜய்யின் மனைவியும் பெரும்பாலான நாட்கள் அமெரிக்காவின் தான் இருப்பதாக சொல்லப்படுகிறது. 


குடும்பத்துடன் இருப்பதற்காக அமெரிக்கா சென்ற விஜய், தனது தந்தைக்கு ஆப்பரேஷன் என்ற காரணத்தால் தான் அவசரமாக தனது அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு சென்னை திரும்பியதாக சொல்லப்படுகிறது. சென்னை வந்து இறங்கியதும், நேரடியாக தனது அப்பா எஸ்ஏசி.,யை பார்க்க சென்றுள்ளார் விஜய். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் தனது பெற்றோரை சென்று பார்த்துள்ளார். இது தொடர்பான போட்டோ ஒன்று தற்போது வெளியாகி செம வைரலாகி வருகிறது.


விஜய்யும், அவரது பெற்றோருக்கம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளதாக வெளியான தகவல்களையும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் எஸ்ஏசி மறுத்திருந்தார். வாரிசு படம் நாங்கள் அனைவரும் ஒன்றாக சென்று தான் பார்த்தோம் என்றார். அதே சமயம் விஜய்க்கும் தங்களுக்கும் இடையேயான உறவு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கடினமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.


சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்