விஜய்யின் தளபதி 68 கதை இது தானா?.. அப்டேட்லையே அலற விடுறாங்களே

Aug 29, 2023,02:57 PM IST
சென்னை : நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 68 படம் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது படத்தின் கதை பற்றிய முக்கிய தகவலும் கசிந்துள்ளது. இது படத்தின் மீது எதிர்பார்ப்பை இப்போதே பல மடங்கு எகிற வைத்துள்ளது.

நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் 19 ம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கான போஸ்ட் ப்ரொடெக்ஷன் வேலைகள் தீரவிமாக நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார் என்றும், ஏஜிஎஸ் ப்ரொடக்ஷ்ன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, அமெரிக்காவிற்கு ஓய்வெடுக்க  சென்றிருந்த விஜய், தளபதி 68 படத்தின் வேலைகளை ஏற்கனவே துவக்கி விட்டாராம். சமீபத்தில் டைரக்டர் வெங்கட் பிரபு, படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் லாஸ் ஏஞ்சல்ஸ் புறப்பட்டு சென்றுள்ளனர். அங்கு 3D VFX தொழில்நுட்ப முறையில் விஜய்யின் முகத்தை ஸ்கேன் செய்யும் பணிகள் நடந்து வருகிறதாம். இதற்கு முன் ஃபேன் படத்தில் ஷாருக்கானுக்கும், இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுக்கும் மட்டுமே இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தளபதி 68 படத்தின் கதை பற்றிய முக்கிய தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. தளபதி 68 படத்தில் ஆரம்பம் முதல் முடிவு வரை மாஸாக இருக்க வேண்டும் என செம சுவாரஸ்யமாக திரைக்கதையை செதுக்கி இருக்கிறாராம் டைரக்டர் வெங்கட் பிரபு. இதனால் இந்த படம் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் நிச்சயம் ஒரு திருப்பு முனையாக இருக்குமாம். இந்த படத்தில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடிக்க போகிறாராம்.

இவர்களில் ஒரு விஜய் ஹீரோவாகவும், மற்றொருவர் வில்லன். இருவரில் ஒருவர் ரா ஏஜன்ட் கேரக்டர். இருக்கும் பல மோதல் காட்சிகள் படத்தில் இடம்பெற போகிறதாம். இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவும், மகன் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகனும் நடிக்கிறார்களாம். இவர்களுடன் ஜெய், அபர்ணா தாஸ் ஆகியோரும் ஜோடியாக நடிக்க உள்ளனராம். அதோடு மாதவன், பிரபு தேவா ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்க போகிறார்களாம்.

லியோ படத்தின் ரிலீசுக்கு பிறகு தளபதி 68 படத்தின் ஷூட்டிங்கை துவக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராக உள்ள இந்த படத்தை 2024 ல் ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளார்களாம். அனேகமாக 2024 தீபாவளி ரிலீசாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்