- மஞ்சுளா தேவி
சென்னை: கம்பீரமாக உட்கார்ந்திருக்கும் அந்த டீச்சரம்மா முகம் அப்படி இறுகிப் போயுள்ளது.. அதை சற்று நெருங்கிப் பார்த்தால்.. அதில் தெரிக்கும் கவலையும், கோபமும் உஷ்ணத்தை கிளப்புவதாக உள்ளது.. சற்றே குணிந்து பார்த்தால் கையில் துப்பாக்கி.. அதிர வைக்கிறது இந்த கெட்டப்.. விஜய் டிவி புகழ் ராஜலட்சுமிதான் இந்த டீச்சரம்மா என்பது இன்னும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.
விஜய் டிவி புகழ் ராஜலட்சுமி ஒரு நாட்டுப்புற பாடகர். இவரும் இவரது கணவரும் இணைந்து சூப்பர் சிங்கர் ஷோ மூலம் பிரபலமானவர்கள். இவர் இந்த ரியாலிட்டி ஷோவில் கணவர் செந்தில் உடன் சேர்ந்து நிறைய கிராமிய பாடல்களை பாடினார். எல்லாமே ஹிட்டடித்தது. இதன் மூலம் இவர்களுக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இந்த ரியாலிட்டி ஷோவில் ராஜலட்சுமி பாடிய ஏ சின்ன மச்சான் என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி புகழ்பெற்றது.
பின்னர் இவருக்கு திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ராஜலட்சுமி சார்லி சாப்ளின் 2 படத்தில் ஏ சின்ன மச்சான் என்ற தனது முதல் பாடலையே பாடி அசத்தி விட்டார். அத்தோடு நிற்கவில்லை.. தொடர்ந்து புஷ்பா படத்தில் "ஏ சாமி" என்ற பாடலையும் பாடினார். இவர் பாடிய இரண்டு பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதுடன் ஹிட் அடித்தது.
இந்நிலையில், பாடகியாக வலம் வந்த ராஜலட்சுமி தற்போது லைசன்ஸ் என்ற படத்தில் கதாநாயகியாக அவதாரம் எடுத்துள்ளார். அட்டகாசமான கதையுடன் கூடிய படம் இது. இதன் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அந்த டிரைலரே மிரட்டலாக இருந்தது.
ஒரு சாதாரண அரசுப் பள்ளி ஆசிரியை.. திடீரென துப்பாக்கி வைத்துக் கொள்ள லைசன்ஸ் கோரி விண்ணப்பிக்கிறார்.. மாநிலமே பரபரப்பாகிறது.. ஒரு டீச்சரம்மாவுக்கு எதற்கு துப்பாக்கி என்று பலரும் அவரை நோக்கித் திரும்புகிறார்கள்.. கடைசியில் கோர்ட் வரை மேட்டர் போகிறது.. டீச்சருக்கு துப்பாக்கிக் கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதக் கதை.
ராஜலட்சுமி, கம்பீரமாக கையில் துப்பாக்கி வைத்தபடி புரட்சிகரமாக காட்சி தரும் கெட்டப்பிலான புதிய போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் நவம்பர் 3ம் தேதி திரைக்கு வருவதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
"எனக்கு வேறு கிளைகள் கிடையாது" என்ற படத்தின் மூலம் அறிமுகமான கணபதி பாலமுருகன் லைசன்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் ராஜலட்சுமி, ராதாரவி, மாமன்னன் படத்தில் வடிவேலு மனைவியாக நடித்த கீதா கைலாசம், வையாபுரி, பழ கருப்பையா, நமோ நாராயணன் என பலரும் நடித்துள்ளனர். காசி விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்ய ,ஜீவானந்தம் தயாரித்துள்ளார் .
அந்தக் காலகட்டத்தில் ஆசிரியர் கையில் பிரம்பு இருந்தது. மாணவர்கள் ஒழுக்கமாக இருந்தனர். பிரம்பு இப்போது கீழே விழுந்து விட்டது. அதனால் மாணவர்களிடம் ஒழுக்கம் போய்விட்டது. பள்ளி பருவத்தில் வராத ஒழுக்கம் கடைசி வரை வராது .இதனால் ஆசிரியர்கள் கையில் மீண்டும் பிரம்பை கொடுக்க வேண்டும் என்ற சமூக சிந்தனை கொண்ட படமாக இது உள்ளது. மாணவர்கள் அனைவரும் இந்த படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும் என டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் கணபதி பாலமுருகன் கூறியிருக்கிறார்.
ராஜலட்சுமியை பாட வைத்து கேட்டிருக்கிறோம்.. ஜாலியாக டான்ஸ் கூட ஆடியிருக்கிறார்.. இப்போது அவரது நடிப்பைக் காண.. அதுவும் புரட்சிகரமான அவரது நடிப்பைக் காண மொத்த தமிழ்நாடும் காத்திருக்கிறது.. !
அமைச்சராகப் பதவியேற்றார் மனோ தங்கராஜ்.. மீண்டும் பால்வளத்துறையே ஒதுக்கீடு செய்யப்பட்டது!
நான் கேட்டதும் ஷாருக்கான் செய்த அந்த செயல்.. நெகிழ்ச்சியுடன் நினைவு கூறும் வாசிம் அக்ரம்
வங்கி வேலைக்கு Goodbye சொல்லி விட்டு.. Audi கார் மூலம் பால் விற்பனை செய்யும் இளைஞர்.!
கடற்படைக்காக.. 26 ரபேல் போர் விமானங்களை பிரான்சிடமிருந்து வாங்கும் இந்தியா!
அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி.. ரைமிங்காக பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின்..!
தமிழ்நாட்டில் இன்று முதல் மே 4 வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
மே 4ல் அக்னி நட்சத்திரம்.. வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ.. பாகிஸ்தான் youtube சேனல்களுக்கு மத்திய அரசு தடை
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
{{comments.comment}}