கூட்டணிக்கு யாரும் வரல...தேர்தல் திட்டம் இதுவா...என்ன செய்ய போகிறார் விஜய்?

Jan 06, 2026,05:08 PM IST
சென்னை : ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டிலேயே அறிவித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் கூட இப்போது வரை எந்த அரசியல் கட்சியும் விஜய்யுடன் கூட்டணி வைக்க தயாராக இல்லை. கூட்டணி வைக்கலாமா என யோசித்த சிலரும் கரூர் சம்பவத்திற்கு பிறகு பின்வாங்கி விட்டார்கள். 

சமீபத்தில் அதிமுக.,வில் இருந்து செங்கோட்டையன், இன்னும் சில கட்சிகளில் இருந்து ஒரு சில நிர்வாகிகள் மட்டும் தான் தவெக.,வில் சென்று இணைந்துள்ளார்கள். ஆனால் அரசியல் கட்சிகள் எதுவும் கூட்டணிக்கு வரவில்லை. தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் தான் உள்ளது. அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என பிஸியாக உள்ளார்கள். ஆனால் தவெக தரப்பில் தொடர்ந்து மெளனம் தான் நிலவுகிறது. என்ன போகிறார்கள்? இவர்களின் தேர்தல் திட்டம் தான் என அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது பற்றி எல்லாம் விஜய் ஏற்கனவே யோசித்து, தெளிவாக திட்டமிட்டு விட்டாராம்.





விஜய், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போகிறார் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த தவறை மட்டும் செய்து விடக் கூடாது என்பதில் விஜய் மிக உறுதியாக இருப்பதாக தவெக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தனித்து போட்டியில்லை என்றால், கூட்டணியா? யாருடன் கூட்டணி? என்று கேட்டால், அது இப்போது வரை இறுதி செய்யப்படவில்லையாம்.

தனித்து போட்டியிட்டு 20 சதவீதம் ஓட்டுக்கள் பெற்றாலும் எத்தனை எம்எல்ஏ.,க்கள் தவெக.,விற்கு என்பது தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அப்படிப் பார்த்தால் தவெக.,விற்கு 5 எம்எல்ஏ.,க்கள் கிடைப்பதே மிக அரிது தான். அந்த 5 எம்எல்ஏ.,க்களை மட்டும் பெரிதாக ஒன்றுமே செய்து விட முடியாது. சரி, சினிமாவில் நடிக்க போகலாம் என்றால் அரசியல் ரீதியாக சினிமாவில் விஜய் நிறைய நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். வருடத்திற்கு ஒரு படம் நடித்து, அந்த படமும் பிரச்சனை இல்லாமல் ரிலீசாகும், வசூலை குவிக்கும் என உறுதியாக சொல்ல முடியாது.

அதனால் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பது தான் புத்திசாலித்தனம் என விஜய் முடிவெடுத்திருக்கிறார். அது தான் அவரது எதிர்காலத்திற்கும், கட்சியின் எதிர்காலத்திற்கும் நல்லது என விஜய் நினைக்கிறாராம். அதனால் தான் காங்கிரஸ் கூட்டணியை பெரிதும் எதிர்பார்த்து இப்போது வரை காத்திருக்கிறார்களாம். ஆனால் காங்கிரஸ், திமுக உடனான உறவை முறித்துக் கொண்டு, தவெக பக்கம் செல்வதற்கான வாய்ப்பு குறைவாக தான் இருக்கிறது. இதனால் அடுத்த வாய்ப்பாக என்டிஏ கூட்டணியில் சேரலாமா என விஜய் ஆலோசிக்க துவங்கி விட்டாராம்.

அரசியல் எதிரியை வீழ்த்த, கொள்கை எதிரியுடன் கூட்டணி வைத்தால் தவறில்லை என்ற அடிப்படையில் என்டிஏ கூட்டணி பக்கம் விஜய் விரைவில் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. அப்படி என்டிஏ பக்கம் விஜய் சென்றால், என்டிஏ கூட்டணி வெற்றி பெறுவது மட்டுமல்ல தவெக.,விற்கு கணிசமான எம்எல்ஏ.,க்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இது விஜய்யின் அரசியல் எதிர்காலத்திற்கு மிகப் பெரிய அடித்தளமாகவும் அமையும் என சொல்லப்படுகிறது.  பொங்கலுக்கு பிறகு அல்லது ஜனவரி மாத இறுதியில் விஜய் தனது கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமித்ஷாவா அவதூறு ஷாவா?...கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

news

ஜனநாயகன் பட வழக்கு...படம் ரிலீசாகும் ஜனவரி 09ம் தேதி காலை தீர்ப்பு

news

ஆட்டத்தை துவங்கிய அதிமுக...பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்

news

ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் போட்டி அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

news

அதிமுக கூட்டணியில் இணைந்தது அன்புமணி தரப்பு பாமக

news

விஜய்யின் கடைசிப்படம் ஜனநாயகன் என்பதை நான் நம்பவில்லை: தமிழிசை செளந்தரராஜன்

news

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தக வெளியீட்டிற்குத் தடை

news

மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுக: அண்ணாமலை காட்டம்

news

தமிழகத்தில் ஆவில் பால் பச்சை பாக்கெட் விலை உயர்வா? ஆவின் நிர்வாகம் விளக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்