எதிர்த்து போராடியிருக்க வேண்டும் விஜயதரணி.. இப்படி துரோகம் செய்திருக்கக் கூடாது.. ஜோதிமணி ஆவேசம்

Feb 25, 2024,05:33 PM IST

சென்னை: பெண்களுக்கு எப்போதுமே அரசியல் போர்க்களம்தான். ஒவ்வொரு நாளும் நெருப்பாற்றை நீந்தித்தான் கடக்க வேண்டியிருக்கிறது. எதிர்த்துப் போராடியிருக்க வேண்டிய விஜயதரணி, தேசத்திற்கு துரகோம் செய்து  விட்டு பாஜகவுக்குப் போயுள்ளார் என்று காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கூறியுள்ளார்.


நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வந்த, 3 முறை விளவங்கோடு தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரான விஜயதரணி நேற்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இது பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.




கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸார் இதை கொண்டாடி வருகின்றனர். இனிமேல் கன்னியாகுமரியில் பாஜகவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்று அவர்கள் லட்டு கொடுத்துக் கொண்டாடிக் கொண்டுள்ளனர். அதேசமயம், விஜயதரணியின் கட்சி தாவல் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. 


இந்தப் பின்னணியில் கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஒரு டிவீட் போட்டுள்ளார். சிந்திக்க வைப்பதாக அது உள்ளது. பெண்களுக்கு, குறிப்பாக அரசியலில் இருக்கும் பெண்கள் சந்திக்கும் ஒரு முக்கியப் பிரச்சினையை - "அங்கீகாரம்" -  கோடிட்டுக் காட்டியுள்ளார் ஜோதிமணி. அதேசமயம், அந்த அங்கீகாரம் கிடைக்காத பட்சத்தில் கொள்கைகளைத் தியாகம் செய்து வேற்று முகாமுக்குப் போவதும் சரியல்ல என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.


ஜோதிமணியின் டிவீட்:




தலைவர் ராகுல்காந்தி நாட்டைக் காக்க இறுதி யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்துவிலகி பாஜகவில் இணைந்திருப்பது, இந்த தேசத்திற்கு செய்யும் மாபெரும் துரோகம். 


அரசியல் பெண்களுக்கு எப்போதும் போர்க்களம் தான். ஒவ்வொரு நாளும் நெருப்பாற்றை நீந்திதான்  கடக்க வேண்டியிருக்கிறது. பெண்களின் உழைப்பும், திறமையும், செல்வாக்கும் அவ்வளவு எளிதாக அங்கீகரிக்கப்படுவதில்லை என்பது உண்மைதான். 


ஆனால்  அதற்காக கொண்ட கொள்கையில் சமரசம் செய்துகொள்வதையும், நாம் இவ்வளவு காலம் எதிர்த்து நின்ற பாஜகவின் பாசறைக்குச் செல்வதையும் எவ்விதத்திலும்  ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார் ஜோதிமணி.




காங்கிரஸிலிருந்து, சிந்தனையாற்றலும், செயலாற்றலும் கொண்ட ஒரு பெண் தலைவர் பாஜகவுக்கு செல்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு நடிகை குஷ்புவும் காங்கிரஸில் தீவிரமாக செயலாற்றி வந்தவர்தான். அவருக்கும் காங்கிரஸ் கட்சியில் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்தால்தான் பாஜகவுக்கு சென்றார். 


சிறந்தவர்களை தவற விடுவது எந்தக் கட்சிக்கும் நல்லதல்ல.. அனுபவத்திற்கேற்ப உரிய அங்கீகாரங்களை, குறிப்பாக பெண் தலைவர்களுக்குத் தருவதை ஒவ்வொரு கட்சியும் உறுதி செய்தாலே இதுபோன்ற முகாம் மாற்றங்களைத் தவிர்க்க முடியும்.


சமீபத்திய செய்திகள்

news

உங்களுடன் ஸ்டாலின்.. முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை.. சி.வி. சண்முகத்திற்கும் Fine!

news

அன்புமணி அறிவித்த பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி டாக்டர் ராமதாஸ் வழக்கு

news

ஆகஸ்ட் 9ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

சிறப்பு எஸ்.ஐ., கொலை... எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை கண்டனம்!

news

ஆகஸ்ட் 17ம் தேதி பொதுக்குழுவைக் கூட்ட இது தான் காரணமா?.. டாக்டர் ராமதாசின் அடுத்த அதிரடி

news

உடுமலை அருகே எஸ்ஐ சண்முகவேல் வெட்டிக்கொலை: 5 தனிப்படைகள் அமைப்பு

news

ஓபிஎஸ் எக்ஸ் பக்கத்தைக் கவனித்தீரா.. 2 நாட்களாக ஒருவரை மட்டுமே வறுக்கிறார்.. யாரைத் தெரியுமா?

news

தவெக மாநில மாநாடு.. புதிய தேதியை அறிவித்த விஜய்.. எப்போது கிடைக்கும் அனுமதி?

news

ராமதாஸ் போன் ஒட்டுக்கேட்பு.. போலீசில் புகார்.. அதிரடி காட்டும் தைலாபுரம்.. அடுத்து என்ன நடக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்