- சசிகலா விஸ்வநாதன்
ஆம்ஸ்டர்டம் வானூர்தி நிலையம் எப்போதும் போல் பரபரப்பில். ஜகதா கணியில் நாளை ஐசிஐசிஐ யில் தான் தரவிருக்கும் சொற்பொழிவை தயாரித்துக் கொண்டிருந்தாள்.
'அம்மா' என்று அவள் காலைக் கட்டியது; ஒரு குட்டி தேவதை. திடுக்கிட்ட ஜகதா , "உன் அம்மா ; எங்கே" என்றாள்
"நீதானே" என்றது; அது " நானா?" அவளுக்கு தலை சுற்றியது. அதற்குள் ஒரு பெண், ஓடிவந்து, குழந்தையை தூக்கினாள், பறந்த தன் தலை முடியை சரி செய்து கொண்டு, "நன்றி! ஸாரி ஃபார் டிஸ்டர்பன்ஸ்' என்றவள் பிரமித்து நின்றுவிட்டாள்.

"அபிதா! நீயா? உன் குழந்தையா? நீ இங்கே எப்படி?" என்றபடி ஜகதா அவளை, அன்புடன் அணைத்துக் கொண்டாள். யாரிடமும் சொல்லாமல் காதலனின் கைபிடித்து வீட்டைவிட்டு வெளியேறிய தங்கையை அவளது குழந்தையே வானூர்தி நிலையத்தில் சேர்த்து வைக்கும் விந்தையை அபிதாவோ ஜகதாவோ எதிர்பார்த்திருப்பார்களா?
அவர்கள் உருவ ஒற்றுமையால் குழந்தை, சகோதரிகளை ஒன்று சேர்த்த அதிசயம், நடந்தது என்னவோ, உண்மை.
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும், தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)
ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!
Short Story: காணாமல் போன கண்ணன்
மிளகு பொங்கல் வாசம் மிடுக்காய் பரவி வீசும் பலகாய்கறி சாம்பார் படக்கென பசி தூண்டும்!
குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு
Folk song by PS Murugesan: பட்டிக் காட்டு மாமன் என்னை கட்டிக் கொள்ள வா புள்ளே!
பாஸ்போர்ட் என்றால் என்ன.. அதை எப்படி எடுக்கணும்.. மாணவர்களுக்கு சூப்பர் கிளாஸ்!
தேவதை போல் நீ நடந்து.. பட்டுப்புடவை அணிவதன் மகிமை என்னன்னு தெரியுமா?
இந்தக் காதலை மட்டும்...கட்டுப்படுத்த முடியலையே!
உசுரே நீதானே ஒறவாய் வருவேனே..
{{comments.comment}}