விஷ்ணுபதி புண்ணிய காலம்.. மகா விஷ்ணுவை எப்போது வழிபடலாம்?

May 14, 2026,12:47 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


பராபவ வருடம் 20 26 மே 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, வைகாசி முதல் நாள் விஷ்ணுபதி புண்ணிய காலம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடம் விஷ்ணுபதி புண்ணிய காலம் என்பது வைகாசி 1,ஆவணி 1, கார்த்திகை 1,மாசி 1 மாதங்களில் சூரியன் ரிஷபம்,சிம்மம்,கும்பம், விருச்சிக ராசிகளில் பிரவேசிக்கும் நேரம் ஆகும்.


விஷ்ணுபதி புண்ணிய கால நேரம் மற்றும் நாட்கள் :


அதிகாலை 1.30 மணி முதல் காலை 10 :30மணி வரை மகாவிஷ்ணுவை வழிபட மிகவும் சிறப்பு வாய்ந்த நேரம் இது.


1.வைகாசி மாத விஷ்ணுபதி புண்ணிய காலம்  :மே 15 வெள்ளிக்கிழமை.

2. ஆவணி மாத விஷ்ணுபதி புண்ணிய காலம்: ஆகஸ்ட் 17 திங்கட்கிழமை.

3. கார்த்திகை மாத விஷ்ணுபதி புண்ணிய காலம்: நவம்பர் 17 செவ்வாய்க்கிழமை.

4. மாசி மாத விஷ்ணுபதி புண்ணிய காலம்: பிப்ரவரி 13 வெள்ளிக்கிழமை.( கடந்த பிப்ரவரி மாதம் அனுஷ்டிக்கப்பட்டது ).


வழிபாட்டு முறைகள் :




மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமி தாயாரை நினைத்து அதி காலை நேரத்தில் துளசி மாலை சாற்றி வழிபாடுகள் செய்வது சிறப்பு. அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாள் சன்னதியை 27 முறை வலம் வந்து,

27 பூக்களை கொடி மரத்தில் ஒவ்வொரு முறை வலம் வரும் போதும் சமர்ப்பித்து வழிபடுவது மிகவும் விசேஷம்.


இந்த விஷ்ணுபதி புண்ணிய காலம் பல ஏகாதசி விரதங்களுக்கு இணையான புண்ணிய காலமாகும்.வருடத்திற்கு நான்கு முறை வரும் இந்த காலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தவறவிடாதீர்கள். இந்த நாள் மகாவிஷ்ணுவையும், தாயாரையும் நினைத்து வழிபாடுகள் செய்ய தீராத குடும்பப் பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம்.


பிரம்மா,விஷ்ணு சிவனுக்குரிய காலங்கள்:

 

சித்திரை, ஆடி, ஐப்பசி, தை மாதங்கள் பிரம்மாவுக்கு உரிய மாதங்களாக கருதப்படுகிறது. இந்த மாதங்கள் பிறக்கும் காலம் 'விஷூ    புண்ணிய' காலம் எனப்படுகிறது.


வைகாசி,ஆவணி, கார்த்திகை, மாசி ஆகியவை மகாவிஷ்ணுக்கு உரிய மாதங்கள் ஆகும். விஷ்ணுவுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரம் 'விஷ்ணுபதி புண்ணிய' காலம் எனப்படுகிறது.


ஆணி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்கள் சிவபெருமானுக்கு உரிய மாதங்கள் ஆகும்.  சிவபெருமானுக்குரிய   மாதங்களின்  முதல் நாள்  'ஷட    சீதி'  புண்ணிய காலம் எனப்படுகிறது. "ஷடாங்கன்" என்பது சிவபெருமானை குறிப்பதாகும்.


ஏகாதசி திதி மகாவிஷ்ணுவிற்கு உகந்த திதிகளில் சிறந்ததாக கருதப்படுகிறது. அன்று நாம் செய்யும் பூஜைகளும், விரத முறைகளும், வழிபாடுகளும் தரும் பலனை விட இந்த விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு அதிக பலன் தருவதாக கூறப்படுகிறது. பெருமாளின் அருளும், கருணையும் மிகவும் அதிகமாகவும், பூரணமாகவும் கிடைக்கப்பெறும் நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.


கூற வேண்டிய மந்திரம்:

 

"ஓம் நமோ விஷ்ண வே தஸ்மை  நமஸ்தஸ்மை புன:  புன : "


விஷ்ணுபதி புண்ணிய  காலத்தின் முக்கிய நன்மைகள் :


பாவ விமோசனம் :

 

விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் செய்யப்படும் வழிபாடுகள் முற்பிறவி பாவங்கள், கர்ம வினைகள் மற்றும் தோஷங்களை நீக்கும் என்று நம்பப்படுகிறது.


பொருளாதாரம் உயர்வு பெறும் :


தொடர்ந்து நான்கு புண்ணிய காலங்களிலும் விரதமும், வழிபாடுகளும் செய்வதனால் செல்வச் செழிப்பான வாழ்க்கை அமையும்.கடன் பிரச்சினைகள், பல பிரச்சனைகள் நீங்கும்.


குடும்ப ஒற்றுமை மேம்படும்:


விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் குடும்பத்தில் உள்ள அனைவரும் வழிபாடுகள் செய்ய இயலவில்லை என்றாலும், ஒருவர் விரதம் இருந்து,வழிபாடு  செய்தாலும் அந்தக் குடும்பமே ஒற்றுமையுடன் மேம்படும்.


தொழில் வளர்ச்சி பெருகும்:

 

புதிய தொழில் துவங்குதல், புதிய முயற்சிகள், நிலம் வாங்குதல் அல்லது தொழில் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுக்க இந்த விஷ்ணுபதி புண்ணிய கால நேரம் மிகவும் உகந்தது.


நிம்மதியான வாழ்க்கை:

 

குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் தீராத நோய்கள் நீங்க பெற்று, ஆரோக்கியம் பெருகும்- மே மாதம் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரும்  விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு.


பெருமாளின் அருள் அனைவரும்  கிடைக்கப்பெற்று நல்வாழ்வு வாழ்வோமாக. மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி  பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் ஒரு சுனாமி.. தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு.. திமுக கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

news

கேரளத்தின் புதிய முதலமைச்சராகிறார் வி.டி. சதீசன்.. காங்கிரஸ் அறிவிப்பு

news

ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை நாளை வருமா.. முதல்வர் விஜய் விளக்கம்

news

விஷ்ணுபதி புண்ணிய காலம்.. மகா விஷ்ணுவை எப்போது வழிபடலாம்?

news

கூட்டணிக் கட்சியினருக்கு மனத்தாங்கல் ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்.. மு.க.ஸ்டாலின்

news

Tasmac: 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பனை செய்யக் கூடாது.. ஸ்ட்ரிக்ட் உத்தரவு

news

3 திருமணங்கள்.. எல்லாமே தோல்வி.. வாழ்க்கை முடிந்துவிடவில்லை.. மீரா வாசுதேவனின் புதிய தொடக்கம்

news

மலரே !

news

எட்டி எட்டிப் பார்த்தான்.. எட்ட நின்று பார்த்தான்.. புடுச்சுப்போச்சு!

அதிகம் பார்க்கும் செய்திகள்