சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியில் கலகக் குரல் எழுப்பியதால் அவரின் கட்சி பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்டது. இந்நிலையில் டில்லி சென்ற அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தான் சந்தித்து விட்டு வந்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்து மீண்டும் பரபரப்பை கிளப்பினார்.
செங்ஙகோட்டையன் அமித்ஷாவை சென்று பார்த்தது தான் தற்போது தமிழக அரசியலில் முக்கியமான விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் டில்லி பாஜக வட்டாரங்களில் விசாரித்த போது, மன அமைதிக்காக ஹரித்வார் செல்வதாக சொல்லி விட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முதலில் சந்திப்பதற்கு அனுமதி கேட்டது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தான். ஆனால் உள்துறை அமைச்சர் அமித்ஷா இருக்கும் போது, தான் செங்கோட்டையனை சந்தித்தால் அது கட்சியின் அரசியல் விவகாரங்களில் தலையிடுவதை போல் ஆகி விடும் கூறி, செங்கோட்டையனை சந்திக்க மறுத்து விட்டாராம் நிர்மலா சீதாராமன். அதன் பிறகு தான் அமித்ஷாவை சந்திக்க செங்கோட்டையன் அனுமதி கேட்டுள்ளார்.
ஆனால் தற்போது, இந்தியாவின் எல்லையில் அமைந்துள்ள அண்டை நாடான நேபாளத்தில் நடந்து வரும் கிளர்ச்சி காரணமாக அது தொடர்பான பாதுகாப்பு வேலைகளில் அமித்ஷா பிஸியாக இருந்ததால் செங்கோட்டையனை அமித்ஷா சார்பாக அவரது பிரதிநிதி தான் சந்தித்து பேசி உள்ளாராம். அவரிடம் தான் செங்கோட்டையன் தனது மனதில் உள்ள குமுறல்களை கொட்டி உள்ளாராம்.

தனக்கு சாதமாக பாஜக மேலிடம் ஏதாவது முடிவு செய்யும் என டில்லி சென்ற செங்கோட்டையனுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி உள்ளதாம். காரணம், செங்கோட்டையனை சந்தித்த அமித்ஷாவின் பிரதிநிதி, "கொஞ்சம் பொறுமையாக, அமைதியாக இருங்கள். பாஜக மேலிடம் தமிழகத்தில் நடக்கும் அரசியல் சூழலை தொடர்ந்து கவனித்து வருகிறது. தற்போது பாஜக.,வின் முழு கவனமும் டிசம்பரில் பீகாரில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் தான் உள்ளது. அதை முடித்த பிறகு டிசம்பரில் தமிழகத்தின் மீது பாஜக.,வின் முழு கவனமும் விழ உள்ளது. அதுவரை நீங்கள் கலக குரல் ஏதும் எழுப்பாமல், அவசரப்படாமல் இருங்கள். நாங்கள் அதிமுக.,விடம் பேசி உங்களுக்கு வேண்டியதை செய்ய சொல்கிறோம் என சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளாராம்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி, எடப்பாடி பழனிச்சாமி இல்லாத அதிமுக என பல வழிகளிலும் கூட்டணியில் தங்களின் கையை ஓங்க வைக்க பாஜக ஏற்கனவே முயற்சி செய்து பார்த்து விட்டது. மற்ற மாநிலங்களில் செய்ததை போல் அதிமுக.,வில் குழப்பத்தை ஏற்படுத்தி, கட்சியை உடைத்தால் அது தங்களுக்கு தான் பாதமாக அமையும் என பாஜக மேலிடம் தெரிந்து கொண்டுள்ளது. தற்போது அதிமுக.,வை பகைத்தால் 2021, 2024 தேர்தலில் நடந்தது போன்ற முடிவை 2026ல் மட்டுமின்றி 2029லும் பெற வேண்டி இருக்கும் என நன்கு யோசித்த பிறகு தான் அதிமுக தலைமையை ஏற்று, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக அமித்ஷாவே நேரில் வந்து அறிவித்து விட்டு சென்றுள்ளாராம்.
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}