- ஸ்வர்ணலட்சுமி
பராபவ வருடம் 2026 ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி சித்திரை மாதம் ஆறாம் நாள் ஞாயிற்றுக்கிழமை 'அட்சய திருதியை' கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் திருதியை நாள் 'அட்சய திருதியை ' என்று கொண்டாடப்படுகிறது.
"அட்சயம் " என்றால் அள்ள அள்ளக் குறையாதது. அட்சய திருதியை நன்னாளில் செய்யும் நல்ல விஷயங்கள், தான தர்மங்கள் பல மடங்கு நன்மைகளை தரும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் பல புராண நிகழ்வுகள் நடைபெற்றதாகவும், இந்த நன்னாளில் விலை உயர்ந்த பொருட்களான தங்கம்,வெள்ளி, வைரம் வாங்குவது சிறப்பானதாகவும் கருதப்படுகிறது.
இப்போது இருக்கும் விலை உயர்வில் எங்களால் தங்கம் வாங்க இயலுமா? என்று நீங்கள் மனதில் கேட்கும் கேள்வி புரிகிறது. தங்கம் மட்டும் தான் வாங்க வேண்டுமா? வேறு எந்தெந்த எளிய பொருட்கள் வாங்கலாம் என்பதை பற்றியும், அட்சய திருதியை பற்றிய புராண நிகழ்வுகள் பற்றியும், வழிபடும் முறையை பற்றியும் இப்பதிவில் காண்போம்.
அட்சய திருதியை தேதி& நேரம்: ஏப்ரல் 19 ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஏப்ரல் 20 திங்கட்கிழமை.
திருதியை திதி தொடக்கம் ஏப்ரல் 19 காலை 10:49 மணி முதல் ஏப்ரல் 20 காலை 0 7 :27 மணி வரை.
தங்கம் வாங்க உகந்த நேரம் :

ஏப்ரல் 19,ஞாயிறு காலை 10:49 மணி முதல் மதியம் 12 :20 மணி வரை.
சிறப்பு: அட்சய திருதியை நாளில் வாங்கும் தங்கம், நகை மற்றும் சொத்துக்கள் பன்மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை.
புராண நிகழ்வுகள்: அட்சய திருதியை நன்னாளில்தான் வேதவியாசர் மகாபாரதத்தை சொல்ல விநாயகர் எழுதத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
மகாவிஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் பரசுராமர் அட்சய திருதியை நாளில்தான் ஜமதக்னி முனிவருக்கும், ரேணுகாதேவிக்கும் மகனாக அவதரித்தார் என்றும் கூறப்படுகிறது.
குபேர பகவான் தனது அனைத்து செல்வங்களையும் இழக்க நேர்ந்த போது சிவ பெருமானை நோக்கி தவம் இருந்து வழிபட்டார். இதை அறிந்த சிவபெருமான் குபேரனை வட திசைக்கு அதிபதியாகி அழகாபுரியை ஆளும்படி அருள் புரிந்தார். குபேரன் இழந்த செல்வங்கள் அனைத்தையும் திரும்ப பெற்றது அட்சய திருதியை நன்னாளில்தான் என்று கூறப்படுகிறது.
சிவபெருமான் பிச்சாடனராக வந்து அன்னபூர்ணியிடம் யாசகம் பெற்றதும் அட்சயதிருதியை நாளில்தான் என்றும் கூறப்படுகிறது.
மகாபாரதத்தில் தர்மர் சூரிய பகவானை நோக்கி கடும் தவம் செய்து, அட்சய பாத்திரத்தை பெற்றதும் சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திருதியை திதி அன்றுதான்.எனவே இந்த நாள் "அட்சய திருதியை "என்று அழைக்கப்படுகிறது.
கிருஷ்ண பகவான் தனது நண்பன் குசேலரை செல்வந்தராக மாற்றியதும் அட்சய திருதியை நாளில்தான்.
அட்சய திருதியை நாளில் வாங்க வேண்டிய பொருட்கள்:
அட்சய திருதியை நாள் பெருக்கத்திற்கு உரிய நாளாக கருதப்படுகிறது. இந்த நாள் வாங்கும் பொருள் பல மடங்காக பெருகும் என்பது நம்பிக்கை. ஆகையால் தங்கம், வெள்ளி நகைகள், சொத்துகள் வாங்குவது, புதிய முதலீடுகள் செய்வது, புதிய வாகனம் வாங்குவது,மந்திர ஜபம் செய்வது,யாகங்கள் செய்வது என்று பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
அனைவராலும் விலை உயர்ந்த பொருட்கள் வாங்க இயலாது. மகாலட்சுமியின் அருளால் எப்பொழுதும் லட்சுமி கடாட்சம் தரும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் :அரிசி,பருப்பு, கல் உப்பு, சமையலுக்கு தேவையான பாத்திரங்கள் வாங்குவது சிறப்பு.
மண்பானை குடங்கள், விளக்குகள் போன்றவற்றை வாங்குவதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும். பித்தளை, செம்பு பாத்திரங்கள், மஞ்சள், குங்குமம்,மல்லிகைப்பூ சந்தனம், பால் போன்றவை வாங்குவது சிறப்பு.
பொதுவாக வெள்ளை நிறம் என்பது சுக்கிர பகவானுக்குரிய நிறம் ஆகும். அதனால் மகாலட்சுமி அருளை பெற வெள்ளை நிற பொருட்களை வீட்டில் வாங்கி வைத்து வழிபடுவது சிறப்பு. திருமணத்திற்காக வாங்கும் சீர்வரிசை பாத்திரங்கள் மற்றும் பிற பொருட்கள் இந்த நாளில் வாங்கி வைப்பது சுபிட்சம் தரும்.
வழிபடும் முறை :
அட்சய திருதியை நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து,வீட்டை சுத்தம் செய்து,கோலமிட்டு, பூஜை அறையில் மலர்களால் அலங்காரம் செய்து, நெய் விளக்கேற்றி நைவேத்தியமாக பால் பாயாசம் செய்து வழிபடுவது சிறப்பு.
சிலர் புனித நதிகளில் நீராடுவதும்,வேதங்கள் படிப்பதும் , ஹோமங்கள் நடத்துவதும் வழக்கம்.
ஏழை எளியவர்களுக்கு தங்களால் இயன்ற அளவு தான தர்மங்கள் செய்வது அதிக பலன் தரும். அன்னதானம் செய்வதும், ஏழை எளிய மாணவர்களுக்கு படிக்க உதவி செய்வதும் மிக மிக சிறப்பானது ஆகும். லட்சுமி குபேர பூஜை செய்வது சிறப்பு. சிலர் கலசம் வைத்து பூஜை செய்வது வழக்கம். புதிய சொத்து வாங்க அட்வான்ஸ் கொடுப்பதும், அக்ரிமெண்ட் போடுவதும் சிறப்பு.திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப காரியங்கள் செய்ய உகந்த நாள்.
தென் தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் அட்சய திருதியை நல்வாழ்த்துக்கள். மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?
Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!
அட்சய திருதியை.. சித்திரை மாத பொன்னான நாளிது.. மூன்றாம் பிறையில் வரும் நாளிது!
அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
{{comments.comment}}