நித்தம் நித்தம் நெல்லுச்சோறு.. உண்ணும் போது செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவை!

Jan 28, 2026,03:47 PM IST

- கவிநிலவு சுமதி சிவக்குமார்


உணவு உண்ணும் வகைகள் வெவ்வேறு இருந்தாலும் உண்ணும் முறைகள் சில மாறுவதில்லை. உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய சிலவற்றையும் தவிர்க்க வேண்டிய சிலவற்றையும் பார்க்கலாம்.


கிழக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் ஆயுள் வளரும். தெற்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் புகழ் உண்டாகும். மேற்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் செல்வம் வளரும். வடக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிடக் கூடாது. 


குறிப்பிட்ட அளவிற்கு மேல் அதிகமாக உண்டால் நோய் வரும். நம் ஆயுள் குறையும். போதும் என்ற அளவுக்கு உணவு உண்ண வேண்டும்.


நன்றாக பசித்த பின் தான் சாப்பிட வேண்டும். பசி எடுக்காமல் சாப்பிடக் கூடாது.




உணவை நன்றாக மென்று உமிழ்நீர் கலந்து மாவாக அரைத்தப்பின் முழுங்க வேண்டும். அப்போது தான் ஜீரணம் ஆகும். இடையிடையே தண்ணீர் குடிக்கக் கூடாது. 


மிளகு, சீரகம், இஞ்சி, வெந்தயம், கடுகு, நல்லெண்ணெய், பசுந்நெய்  சேர்ப்பதால் உடலின் வெப்பத்தை போக்கி குளிர்ச்சி தந்து எளிதில் ஜீரணம் ஆக உதவுகிறது.


உணவு உண்பதற்கு முன்பு கை கால் வாய் போன்றவற்றை நீரால் கழுவி சுத்தமாக உண்ண வேண்டும். 


சாப்பிடும் தட்டில் தாளம் போடக் கூடாது. உணவு உண்ணும் போது பேசக் கூடாது. எதுவும் படிக்கக் கூடாது. முக்கியமாக இக்கால கட்டத்தில் ஃபோன் பார்க்கவும் டிவி பார்க்கவும் கூடாது. இடது கையை கீழே ஊன்றி சாப்பிடக் கூடாது.


தரையில் சாப்பாடு சிந்தாமல் சாப்பிட வேண்டும். கையை உதறி சாப்பிடக் கூடாது. காய்கறிகளை தவிர்க்காமல் உண்ண வேண்டும்.


வீட்டில் வாசலுக்கு அருகில் அமர்ந்து உண்ணக் கூடாது. காலில் காலணி அணிந்துக் கொண்டு உண்ணக் கூடாது. நாற்காலியில் அமர்ந்து சாப்பிடக் கூடாது. தரையில் நின்று கொண்டு சாப்பிட கூடாது. அன்னலட்சுமிக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.


சூரிய உதயம் ஆகும் போதும் சூரிய அஸ்தமனம் ஆகும் போதும் அது இரண்ய நேரம் என்பதால் உண்ணக் கூடாது.  உணவு உண்ணும் போது உணவிலும் உண்பதிலும் கவனம் இருக்க வேண்டும்.


இருட்டிலோ அல்லது நிலவொளி இல்லாத இடங்களிலோ உண்ணக் கூடாது. பௌர்ணமி அன்று நிலவொளியில் தனியாகச் சாப்பிடக் கூடாது. வாசலில் அல்லது மொட்டை மாடியில் அமர்ந்து குடுமபத்தினருடன் சேர்ந்து அம்மா கையால் உருண்டை சோறு அல்லது பிடிசோறு சாப்பிடுவது சொர்க்கம்.


சாப்பிடும் போது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. கை கழுவிய பின்னர் உண்ணலாம். அவ்வாறே தும்மினால் கை கழுவிய பின் தான் சாப்பிட வேண்டும்.


சாப்பிடும் போது சாப்பாடு தட்டைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தரையில் அல்லது மணையில் வைத்து தான் உண்ண வேண்டும்.


பூவரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும். வாழை இலையில்  சாப்பிட்டால் வளம் கிடைக்கும். தாமரை இலையில் சாப்பிட்டால் தனம் செழிக்கும். மந்தாரை இலையில் சாப்பிட்டால் மந்த நிலை மாறும். வெள்ளி தட்டில் சாப்பிட்டால் செல்வம் சேரும். 


நாம் சாப்பிட்ட எச்சில் பட்ட தட்டுக்களை வைத்து மற்ற சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவுப் பாத்திரங்களையோ மூடி வைக்கக் கூடாது.


இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.


இப்படி பார்த்து பார்த்து வாழ்ந்ததால் தான் அந்த காலத்தில் நம் முன்னோர்கள் 100 வயதிற்கு மேல் வாழ்ந்தார்கள். நாமும் வாழலாம். வாழ்க வளமுடன்..!!


(சுமதி சிவக்குமார்.. B. A., M. com., (co-op mgt)., M. A ., (yoga) ., DOM., (computer)., . கள்ளக்குறிச்சி மாவட்டம் மூஙகில்துறைப்பட்டு என்ற ஊரைச் சேர்ந்தவர். தனது ஊரில் ஏரிக்கு நீர் கொண்டு வர இணையும் கைகள் என்றொரு அமைப்பை ஏற்படுத்தினார் உயர்திரு அப்துல் ரஹீம் அவர்கள். நீர் நிரம்பி இருமுறை கோடி போனது. அதனால் கோமுகி நதியை வாழ்த்தி‌ நடந்தால் வாழீ கோமுகி என்ற கவிதையை பதிவிட்டார் சுமதி சிவக்குமார். முகநூலில் நிறைய கவிதை தளங்களில் கவிதைப் போட்டி நடுவராகவும் கவியரங்கம் தலைவராகவும் திகழ்கிறார். கிட்டத்தட்ட 3000 சான்றிதழ்கள் 50 ஷீல்டுகள் பரிசு பெற்றுள்ளார். நாட்டுப்புற பாடல் எழுதி பாடவும் செய்வார். மதியின் மதி என்ற கவிதை புத்தகம் , தெம்மாங்கு பாடலா என்ற நாட்டுப்புற பாடல்கள் புத்தகம் வெளியிட்டுள்ளார்.  சின்னசேலம் கண்ணதாசன் கலை இலக்கிய பேரவையின் செயலாளராக செயல்படுகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!

news

தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?

news

ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்

news

விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி

news

எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?

news

இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்

news

குடியரசு தின விழாவில் அசத்திய பண்ணைவிளாகம் பள்ளி மாணவர்கள்!

news

திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!

news

சபாஷ் டீச்சர்ஸ்.. தேசிய புதுமை கல்வி ரத்னா விருது.. தமிழ்நாட்டிலிருந்து 4 ஆசிரியர்கள் தேர்வு!

அதிகம் பார்க்கும் செய்திகள்