சென்னை: சமீபத்தில் டில்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விட்டது தொடர்பாக பலவிதமான செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக மீடியாக்களில் பரவி வருகிறது. இவை ஒரு புறம் இருந்தாலும் அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிச்சாமி என்ன தான் பேசினார்? என்ற கேள்வியும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
பரபரப்பாக பேசப்படும் இந்த சந்திப்பிற்கு பின்னால் உண்மையில் நடந்தது என்ன? இந்த சந்திப்பின் விளைவாக தற்போது தமிழக அரசியலில் நடந்து கொண்டிருப்பது என்ன என்பது பற்றிய புதிதாக சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார் என்பதை விட, எதற்காக அவர் முகத்தை கர்சீப்பால் மூடியபடி வந்தார் என்பது தான் விவாத பொருளாக மாறி உள்ளது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமியே இன்று காலை சேலம் ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்த போது விளக்கம் அளித்து விட்டார். இருந்தாலும் டில்லியில் அமித்ஷா வீட்டில் நடந்தது என்ன என்பது தெரிய வேண்டும் அல்லவா?
டில்லியில் நடந்தது என்ன?

அமித்ஷா வீட்டிற்கு சென்று, எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்தித்தபோது, முதலில் கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து தான் அமித்ஷாவிடம் பேசி உள்ளார் இபிஎஸ். அதற்கு பிறகு நிர்வாகிகள் சென்ற பிறகு, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அமித்ஷாவுடன் தனியாக பேசினாராம் இபிஎஸ். இந்த சந்திப்பின் போது, மிக முக்கியமாக இரண்டு விஷயங்களை அமித்ஷாவிடம் இபிஎஸ் வலியுறுத்தினார்.
டிடிவி தினகரனை அதிமுக.,வில் சேர்த்தால் எப்போதும் பிரச்சனை என்பதால் அவரை சேர்த்துக் கொள்ள முடியாது என்றும், அதே சமயம் அவர் தனிக்கட்சி வைத்துள்ளதால் நீங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் எங்களுக்கு ஆட்சேபனை கிடையாது என்றும் சொல்லி விட்டு வந்தாராம் இபிஎஸ்.
அதற்கு முன்பாக அதிமுக..வின் உட்கட்சி விவகாரங்களில் தலையிட தாங்கள் தயாராக இல்லை என அமித்ஷா திட்டவட்டமாக கூறி விட்டாராம். டில்லி செல்வதற்கு முன் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவில் பேசிய இபிஎஸ்.,ம் இதை உறுதி செய்து விட்டார். அதிமுக விவகாரங்களில் தலையிட கூடாது என பாஜக முடிவு செய்து விட்டதால் தான் டில்லி சென்று செங்கோட்டையனை அமித்ஷா சந்திக்க மறுத்து விட்டாராம். அதே போல் சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரையும் அமித்ஷா இது வரை சந்திக்கவில்லையாம்.
இபிஎஸ் சொன்ன அந்த 2 விஷயங்கள் :

சரி, விஷயத்திற்கு வருவோம். அதிமுக.,வின் உட்கட்சி விவகாரம், அதிமுக.,வை ஒன்றிணைப்பது போன்ற விவகாரங்கள் பற்றி பேசவில்லை என்றால் வேறு என்ன தான் இரண்டு மணி நேரமாக பேசினார்கள்? என்றால், அதிமுக-பாஜக கூட்டணியை உடைக்கும் முயற்சியாக டிடிவி தினகரன், ஓபிஎஸ், அண்ணாமலை போன்றவர்கள் பேசி வருவதால் அவர்களை அமைதியாக இருக்க வேண்டும் படி அமித்ஷாவிடம் கூறி உள்ளாராம் இபிஎஸ்.
அதற்கு அடுத்தபடியாக, அதிமுக.,வின் வெற்றியை தடுக்கும் வகையில் சில மாவட்டங்களில் மிகுந்த செல்வாக்குடன் இருக்கும் திமுக அமைச்சர்களின் பெயர் பட்டியலையும், அவர்கள் மீதான நிலுவையில் இருக்கும் வழக்குகள், ஊழல் விவகாரங்கள் உள்ளிட்ட விபரங்களையும் கொடுத்து விட்டு வந்துள்ளாராம்.
அட.. இதெல்லாம் நடந்திருக்கா?
அதோடு தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுப்பது தொடர்பாக டில்லியில் இருக்கும் சிலரை சந்திக்கும் படி அமித்ஷா, இபிஎஸ் இடம் சொல்லி உள்ளாராம். அவர்களை சந்திப்பதற்காக தான் முதலில் காலை 07.30 மணி விமானத்தில் சென்னை திரும்புவதாக திட்டமிட்டிருந்த இபிஎஸ், பிறகு அதை மாற்றி பகல் 12 மணி விமானத்தில் தமிழகம் திரும்பி வந்துள்ளார்.
இதில் மற்றொரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால் அமித்ஷா-இபிஎஸ் சந்திப்பின் எதிரொலியாக தான் இபிஎஸ்.,க்கு எதிராக செயல்பட்ட அண்ணாமலை, கட்சி மேலிடம் சொன்னதால் தான் செய்தியாளர்களை சந்தித்த போது இபிஎஸ்.,க்கு எதிர்பாராத வகையில் கூட்டம் வருவதாக கூறினாராம்.
ஓபிஎஸ், செங்கோட்டையன் உள்ளிட்டோர் இருக்கும் இடமே தெரியாமல் அமைதி காத்து வருகிறார்களாம். நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றாகவும் இருப்பதால் இப்போது எந்த பக்கமும் சேர முடியாமல், பாஜக.,வை ரொம்ப பகைத்து கொண்டு விட்டோமே என தனியாக வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாராம் டிடிவி தினகரன்.
கூடிய விரைவில் அதிருப்தியில் இருக்கும் அனைவரையும் ஓரணியில் இணைத்து கூட்டணி பலமாக உள்ளதைக் காட்ட பாஜக இப்போது திட்டமிட்டுள்ளதாம். விரைவில் இதில் ஒரு தெளிவு கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.
துள்ளுவதோ இளமை புகழ் நடிகர் அபிநய் காலமானார்.. கல்லீரல் நோயால் மறைந்த சோகம்!
அதிமுக கூட்டணி.. வருவதற்கு யோசிக்கும் தவெக விஜய்.. எடப்பாடி பழனிச்சாமியின் திட்டம் என்ன?
திமுகவை வீழ்த்த நினைத்தால்.. நடிகர் விஜய் இதை செய்ய வேண்டும்.. தமாகா தலைவர் ஜி கே வாசன் யோசனை
SIR.. தேர்தல் ஆணைய திட்டத்தை எதிர்த்து.. திமுக சார்பில் நாளை மாநிலம் தழுவிய போராட்டம்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 10, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரப் போகும் ராசிகள்
ஐப்பசி மாத தேய்பிறை சஷ்டி.. நல்ல ஆரோக்கியத்தையும் ஆன்மீக சக்தியையும் அளிக்கும்!
ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!
இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு
{{comments.comment}}