சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அது என்ன பதிவு செய்யப்பட்ட கட்சி என்ற சந்தேகம் பலருக்கு எழலாம்.. அதைப் பற்றித்தான் இங்கு பார்க்கப் போகிறோம்.
இந்தியாவைப் பொறுத்தவரை 3 வகையான கட்சிகள் உள்ளன. முதல் வகை - தேசியக் கட்சிகள். 2வது வகை - மாநிலக் கட்சிகள். 3வது தான் இந்த பதிவு செய்யப்பட்ட (அங்கீகரிக்கப்படாத) கட்சிகள் - Registered Unrecognised Parties. அதாவது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள், அதேசமயம், இன்னும் அங்கீகாரம் பெறாத கட்சிகள் என்று அர்த்தம்.
இதில் தேசிய கட்சிகள், மாநிலக் கட்சிகளுக்கு நிரந்தரமான சின்னம் இருக்கும். பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் கிடையாது. ஒவ்வொரு தேர்தலின்போதும் அவர்கள் விண்ணப்பித்துதான் சின்னம் பெற வேண்டும். குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை அவர்கள் பெற்றால்தான் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக அல்லது தேசிய கட்சியாக அவர்களுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் தரும்.
தற்போது தமிழக வெற்றிக் கழகம் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி. அவ்வளவுதான்.. இதுதான் தற்போதைய நிலை. வரும் தேர்தல்களில் தவெக போட்டியிட்டு தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள வாக்கு சதவீதத்தைப் பெறும்போதுதான் அக்கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி அந்தஸ்து கிடைக்கும்.
தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்வது அவசியமா?
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து விட்டுத்தான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது அவசியம் இல்லை. யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். ஆனால் அரசியல் கட்சியாக தங்களை அறிவித்துக் கொண்டோர் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 4-ஏ பிரிவின் கீழ் உள்ள சலுகைகளை பெற விரும்புவோர் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துதான் போட்டியிட வேண்டும்.
ஒரு கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும்போது அவர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகள் கிடைக்கும். முக்கியமாக சின்னம். இப்படி பதிவு செய்து போட்டியிடும் கட்சிகளுக்கு, தேர்தல் சின்னம் ஒதுக்கீட்டின்போது சுயேச்சைகளை விட முன்னுரிமை கிடைக்கும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக அல்லது தேசிய கட்சியாக மாறும்போது அவர்களுக்கு அரசு வானொலி மற்றும் தொலைக்காட்சியில் பிரச்சாரம் செய்யவும் வாய்ப்பு கிடைக்கும்.
தமிழ்நாட்டில் தவெக போல பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் எத்தனை உள்ளன?
மக்கள் நீதி மய்யம்
தேசிய முற்போக்குத் திராவிட கழகம்
மதிமுக
இந்திய ஜனநாயகக் கட்சி
இந்திய தேசிய லீக்
அமமுக
கொங்கு நாடு முன்னேற்றக் கழகம்
அகில பாரத இந்து மகாசபா
புரட்சி பாரதம்
புதிய தமிழகம்
எஸ்டிபிஐ
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
அனைத்திந்திய திராவிடர் சமுதாய முன்னேற்றக் கழகம்
அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி
அகில இந்திய சிறுபான்மையினர் முன்னணி
அகில இந்திய சிவில் உரிமை பாதுகாப்புக் கட்சி
அம்பேத்கர் மக்கள் இயக்கம்
சிபிஐஎம்எல் எல்
சிபிஐஎம்எல்எல் கம்யூனிஸ்ட் கட்சி
ஜெபமணி ஜனதா
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (உல்குலன்)
லெனின் கம்யூனிஸ்ட் கட்சி
லோக் சத்தா கட்சி
மனித நேய மக்கள் கட்சி
எம்ஜிஆர் தொண்டர்கள் கட்சி
மக்கள் மாநாடு கட்சி
மக்கள் சக்தி கட்சி
இந்திய மக்கள் கட்சி
இந்திய குடியரசுக் கட்சி
இந்திய குடியரசுக் கட்சி (ஏ)
இந்திய சோசலிச ஒற்றுமை மையம் (கம்யூனிஸ்ட்)
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி
உழைப்பாளி மக்கள் கட்சி
இளைஞர் மாணவர் கட்சி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவையும் இதுநாள் வரை பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளாகத்தான் இருந்தன. கடந்த லோக்சபா தேர்தலில் நிர்ணயிக்கப்பட்ட வாக்கு சதவீதத்தை அவை பெற்றதால் அங்கீகாரம் பெற்றன என்பது நினைவிருக்கலாம்.
அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக மாற என்ன தகுதி?
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியானது, கீழ்க்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் அந்த்க கட்சிக்கு மாநிலக் கட்சி அங்கீகாரம் கிடைக்கும்.
1. ஒரு கட்சியானது தான் போட்டியிடும் சட்டசபைத் தேர்தலில் குறைந்தது 2 சீட்டுகளில் ஒரே சின்னத்தில் வெற்றி பெற வேண்டும் மேலும் 6 சதவீத வாக்குகளையும் அது பெற வேண்டும்.
(அல்லது)
2. லோக்சபா தேர்தலில் 6 சதவீத வாக்குகள் மற்றும் ஒரு தொகுதியில் வெல்ல வேண்டும்.
(அல்லது)
3. ஒரு கட்சியானது தான் போட்டியிடும் தொகுதிகளில் குறைந்தது 3 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும்.
(அல்லது)
4. ஒரு கட்சியானது மொத்தம் பதிவான வாக்குகளில் 8 சதவீத வாக்குகள் அல்லது அதற்கு மேலான வாக்குகளைப் பெற்றால் மாநிலக் கட்சி அங்கீகாரம் கிடைக்கும்.
இந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. இனி போகப் போக அது மற்ற நிலைகளைக் கடக்கும். அதேசமயம், தமிழ்நாட்டில் தற்போது உள்ள பெரும் அரசியல் சக்திகளுக்கு மாற்றாக தவெக உருவெடுக்குமா என்பதை போகப் போகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
உயர்வில் நேற்று இருந்த தங்கம் இன்று குறைவு... எவ்வளவு குறைவு தெரியுமா?
திமுக முப்பெரும் விழா.. கோலாகல விழாக் கோலத்தில் கோடங்கிப்பட்டி.. களை கட்டிய கரூர்!
உசேன் போல்ட்.. என்னா வேகமா ஓடிட்டிருந்தாரு.. இப்ப என்ன பண்ணிட்டிருக்காரு பாருங்க!
இனப்பகையை சுட்டெரிக்கும் பெரு நெருப்பு.. அவர் நம் பெரியார்.. மு.க.ஸ்டாலின், இ.பி.எஸ். புகழாரம்!
பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வந்த 1300 பொருட்கள்.. ஆன்லைனில் ஏலம்.. இன்று முதல் அக். 2 வரை
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 17, 2025... இன்று பணம் தாராளமாக வரும்
Diwali Special trains: பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு நாளை முதல்!
தமிழகத்தில் இன்று 10 மற்றும் நாளை 19 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை
வக்ஃபு திருத்தச் சட்டம்:உச்சநீதிமன்றம் சில பிரிவுகளுக்கு விதித்துள்ள தடையை வரவேற்கிறோம்:திருமாவளவன்
{{comments.comment}}