சிந்தனைச் சிதறல்.. ஒருவருக்கு தவறெனத் தோன்றுவது மற்றவருக்கு சரியெனத் தோன்றுகிறது!

Apr 22, 2026,05:58 PM IST

- அ. தாமஸ் 


இந்த உலகில் தவறு என்று எந்த ஒன்றும் தனியாக இல்லை ஒருவருக்கு தவறெனத் தோன்றுவது மற்றவருக்கு சரியெனத் தோன்றுகிறது. சில நேரங்களில் நமக்கே, நாம் சரி என்று நினைப்பது தவறாகத் தெரிகிறது தவறு என்று செய்தது சரியாகத் தெரிகிறது. எனவே செய்த தவறுகளை நினைப்போம் இனியாவது தவறாமல் இருப்போம்.


எந்த ஒன்று பிறரை உடல் அளவிலோ மனதளவிலோ காயப்படுத்துகிறதோ அதுவே தவறு.எனவே தவறுவதில் தவறில்லை; தவறை தவறு என்று தெரிந்தும் தவறுவது தான் தவறு. அதே நேரத்தில் தவறை உணர்ந்து வருந்தும் பொழுது அத்தவறே தன்னிலை இழந்து விடும். எனவே தவறியதை நினைத்துத் தளர வேண்டாம் .




மறப்பது மனித குணம். மறதி தான் இறைவன் மனிதனுக்குக் கொடுத்த மிகச்சிறந்த வரம். எனவே நல்லதை நினைப்போம்; அல்லவை முழுமையாய் மறப்போம்;மறந்ததை மீண்டும் நினைக்காமல் இருப்போம்; தினம் மகிழ்வினில் திளைப்போம்.


 தவறுகளை வெறுப்போம் தவறியவர்களை அல்ல ஒருவர் செய்த தவறுக்காக தவறியவரை வெறுக்க ஆரம்பித்தால் இவ்வுலகில் உண்மையாய் நேசிக்க ஒரு உறவு கூட  மிச்சம் இருக்காது.ஆம் தவறாத மனிதர் இல்லை தவறவே இல்லை எனில் அவர் மனிதரே இல்லை. எனவே தவறுகளை மட்டுமே வெறுப்போம்;தவறியவர்களை முற்றாய் நேசிப்போம் ;மீண்டும் அவர்கள் தவறாமல் இருக்க.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!

news

முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

news

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு

news

நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்

news

ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்

news

போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?

news

முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்