சென்னை: அப்பன்டிசைடிஸ் எனப்படும் குடல் வால் அழற்சி வந்து விட்டாலே பலரும் பயந்து போய் விடுகிறார்கள். பயமெல்லாம் தேவையில்லைங்க. மாறாக, உரிய சிகிச்சை மற்றும் உணவுப் பழக்க வழக்கத்தை பின்பற்றினாலே போதும். இதிலிருந்து மீண்டு வரலாம்.
அப்பன்டிசைடிஸ் ஏற்பட்டால் உணவில் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியம். வீக்கம் மற்றும் வலி குறையவும், செரிமானத்தை சுலபமாக்கவும், நோய்க்குறிகளை மேலோங்க விடாமல் இருக்கவும் எளிதாக ஜீரணிக்கக்கூடிய உணவுகளை உட்கொள்வது முக்கியம்.
பொதுவாகவே வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் இருந்தாலே, செரிமானம்தான் நாம் முதலில் கவனிக்க வேண்டும். எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை எப்போதுமே எடுத்துக் கொள்வதும் கூட சிறந்தது. சரி இப்போது அப்பன்டிசைடிஸ் வந்தால் என்னெல்லாம் சாப்பிடலாம் என்பது குறித்துப் பார்ப்போம்.
உடம்புக்கு சரியில்லாவிட்டால் டாக்டர்கள் நமக்குப் பரிந்துரைப்பது கஞ்சிதான். கஞ்சி என்றால் அரிசி, சாமை, கம்பு போன்றவற்றை கஞ்சியாக்கி சாப்பிடலாம். எளிதில் ஜீரணமாகும்.
சத்தான சூப்புகள் சாப்பிடலாம். அதாவது காய்கறி சூப் போன்றவை சாப்பிடலாம். இது உடலுக்குத் தேவையான சத்தைத் தரும். கூடவே செரிமானமும் எளிதாக இருக்கும்.
எளிதாக ஜீரணிக்கக்கூடிய பழச்சாறுகள் அருந்தலாம். பொதுவாகவே பழச்சாறுகள் உடலுக்கு நல்லது. மாம்பழம், திராட்சை போன்ற பழச்சாறுகள் பருகலாம்.
நன்கு வேகவைத்த உணவுகளையே எப்போதும் சாப்பிட வேண்டும். அப்போதுதான் அது மசிந்து எளிதாக ஜீரணமாகக் கூடிய வகையில் இருக்கும். வெள்ளரிக்காய், பூசணி, தக்காளி போன்ற காய்கறிகளை வேகவைத்து சாப்பிடலாம்.
வெந்தயக் கஞ்சி அல்லது ராகி களி போன்றவையும் கூட உடலுக்கு நல்லது. மீன், வெள்ளரிக்காய், தர்பூசணி போன்ற நீர் அதிகமாக உள்ள உணவுகளையும் சாப்பிடலாம்
அதிக அளவில் வெந்நீர், இளநீர், பார்லி கஞ்சி ஆகியவற்றையும் தேவையான அளவுக்கு அருந்தலாம். தயிர், மோர், இஞ்சி நீர், சிறிதளவு பாலுடன் வெந்தயப் பொடி போன்றவையும் போதிய அளவு எடுக்கலாம். மோர் மிக மிக நல்லது.
தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்
மசாலா, காரமான உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நன்றாக வெந்த பொரியல்கள், அதிக எண்ணெய் சேர்த்த உணவுகளையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
சோளம், பீன்ஸ், காலிஃபிளவர் போன்ற வாயு உருவாக்கும் உணவுகளையும் கூட தவிர்க்க வேண்டும். உருளைக்கிழங்கையும் தவிர்க்கலாம்.
காஃபீன், கார்பனேற்றப்பட்ட பானங்கள், ஆல்கஹால் போன்றவற்றையும் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. இரும்புச்சத்து (Iron) கொண்ட உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
முக்கிய அறிவுரை
தினமும் நிறைய தண்ணீர் குடிக்கவும். சாப்பாட்டை மொத்தமாக சாப்பிடாமல், சிறு சிறு அளவுகளில் உணவுகளை உட்கொள்ளவும். அதாவது காலையில் 8 மணிக்கு கொஞ்சம், 12 மணிக்குக் கொஞ்சம், 4 மணிக்கு, பிறகு இரவு 8 மணிக்கு என பிரித்து சாப்பிடுவதை பின்பற்றலாம்.
எந்த வகையான உணவு சாப்பிட்டாலும் உரிய மருத்துவர் ஆலோசனைப்படி உணவுமுறையை கடைபிடிப்பது நல்லது.
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு
Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!
எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??
திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!
மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு
ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
{{comments.comment}}