2024 -25 ஆம் ஆண்டுக்கான.. 3வது மோடி அரசின் முதல் பட்ஜெட்.. 22ம் தேதியா அல்லது 24ஆ?

Jun 15, 2024,05:10 PM IST
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசின் 2024-25 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் வரும் ஜூலை 22 ஆம் தேதி அல்லது 24ம் தேதி தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. தொடர்ச்சியாக, ஏழாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து புதிய சாதனை படைக்கவுள்ளார். 

பதினெட்டாவது லோக்சபா தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று, பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இவர் பொறுப்பேற்ற பின் முதல் கூட்டுத்தொடர் வரும் ஜூன் 24ஆம் தேதி  அதாவது திங்கட்கிழமை தொடங்கி ஜூலை மூன்று வரை நடைபெறுகிறது. இதில் முதல் மூன்று நாட்கள் புதிய உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம் மற்றும் சபாநாயகர் தேர்தல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு மறுநாள் அதாவது 27ஆம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுத் தொடர் கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார்.



இந்த நிலையில் 2024-25ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் வரும் ஜூலை 22ஆம் தேதி அல்லது 24ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 3வது மோடி அரசின் முதல் முழு பட்ஜெட் இது என்பதால் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நாட்டின் உட்கட்டமைப்பு வளர்ச்சி குறித்த திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய், ஐந்து முழு பட்ஜெட், ஒரு  இடைக்கால பட்ஜெட் என ஆறு பட்ஜெட்களை தொடர்ந்து தாக்கல் செய்திருக்கிறார். இவரை சமன் செய்து  நிர்மலா சீதாராமன் கடந்த முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், இந்த வருடம்  ஏழாவதாக பட்ஜெட் தாக்கல் செய்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

Exit Poll: தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும்.. தவெகவுக்கு 3வது இடம்.. எக்ஸிட் போல்

news

அதிமுகவுக்கு அதிக சீட் கிடைக்கும்.. 2 எக்ஸிட் போல்களின் முடிவுகள் கூறுவது என்ன?

news

Exit Poll: தவெகவுக்கு 98 முதல் 120 இடங்கள் வரை கிடைக்கும் - ஆக்ஸிஸ் மை இந்தியா (இந்தியா டுடே)

news

Exit Poll சொல்வது என்ன.. புதிய சக்தியாக உருவெடுக்குமா தவெக.. விஜயகாந்த்தை மிஞ்சுவாரா விஜய்?

news

Exit Poll கலாட்டாக்கள்: "நாலு மே வரட்டும்".. முடியலையே.. முடியலையேடா!

news

தமிழக சட்டசபை தேர்தல் 2026 : யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்?

news

செந்தில் பாலாஜி மீதான டிரான்ஸ்பார்மர் ஊழல் வழக்கு: சிபிஐ.,க்கு மாற்ற உத்தரவு

news

Tamil Nadu: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில்.. மாணவர் சேர்க்கை 1 லட்சத்தைத் தாண்டி அசத்தல்!

news

5 மாநில சட்டசபை தேர்தல் 2026: இன்று மாலை வெளியாகிறது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்