சென்னை : தவெக தலைவர் விஜய், கரூர் சம்பவத்திற்கு பிறகு 2 வாரங்கள் பிரச்சாரத்தை ரத்து செய்திருந்தார். இரண்டு வாரங்கள் முடிந்து விட்ட நிலையில், இந்த வாரத்தில் மீண்டும் விஜய் பிரச்சாரத்தை துவக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும்,. உச்சநீதிமன்றத்தில் விஜய் தரப்பு கோரியபடி விசாரணைக் குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சிபிஐ விசாரணைக்கும் உச்சநீதிமன்றம் விஜய் தரப்பு கேட்காமலேயே உத்தரவிட்டுள்ளது. கிட்டத்தட்ட இது விஜய் தரப்பு சாதகமான சூழல்தான். காரணம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி செந்தில்குமார் செயல்பாடுகள் குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. விஜய்யை தலைமைப் பண்பு இல்லாதவர் என்று கடுமையாக விமர்சித்திருந்தார் நீதிபதி செந்தில்குமார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் விஜய் மீண்டும் பிரச்சாரத்தை எப்போது தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. முன்னதாக, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் செப்டம்பர் 13ம் தேதி தனது பிரச்சார சுற்றுப் பயணத்தை துவக்கினார். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மட்டும் தான் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய போவதாகவும், வருவாய் மாவட்டங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் அவர் அறிவித்திருந்தார். 2026ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி வரை பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும், சென்னையில் தனது பிரச்சார பயணத்தை நிறைவு செய்ய உள்ளதாகவும் தவெக தரப்பில் அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது.
தவெக வெளியிட்ட அட்டவணையின் படி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாகை, திருவாரூர், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரத்தை நிறைவு செய்து விட்டார் விஜய். செப்டம்பர் 27ம் தேதி நாமக்கலில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு விஜய், கரூர் சென்றார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக இரண்டு வாரங்களுக்கு பிரச்சாரத்தை ரத்து செய்வதாக விஜய் அறிவித்தார். இந்த 2 வாரங்களில் அக்டோபர் 05ம் தேதி வேலூர் மற்றும் ராணிப்பேட்டையிலும், அக்டோபர் 11ம் தேதி புதுச்சேரி மற்றும் கடலூரிலும் அவர் பிரச்சாரம் செய்திருக்க வேண்டும்.
தவெக வெளியிட்டுள்ள அட்டவணையின் படி அக்டோபர் 18ம் தேதி தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் விஜய் பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆனால் தற்போது வரை பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டு விஜய் தரப்பில் எந்த கடிதமும் போலீசாரிடம் அளிக்கப்படவில்லை. கட்சி நிர்வாகிகள் கைது, கோர்ட், கேஸ் என அலைந்து கொண்டிருப்பதால் தவெக தற்போது வரை அடுத்த கட்ட பிரச்சாரம் குறித்து எந்த முடிவு எடுக்காததால் விஜய் தற்போது பிரச்சாரத்தை மீண்டும் எப்போது துவக்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு ஏற்கனவே 2 வாரங்கள் ரத்து செய்யப்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் விஜய் எப்போது சென்று பிரச்சாரம் செய்ய போகிறார் என்ற தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில் இன்று விஜய்க்கு சாதகமான நிலையை சுப்ரீம் கோர்ட் உருவாகியுள்ளது. அதன் உத்தரவு, விஜய் தரப்புக்கு சற்று ஆறுதலாக வந்துள்ளது. இது மக்கள் மத்தியிலும் பிரதிபலிக்கும் என்பதால் இதைப் பயன்படுத்தி மீண்டும் விஜய் பிரச்சாரத்தைத் தொடங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நிறைய படிச்சேன்.. எனது பிள்ளைகளுக்கு ரோல் மாடலாக இருக்கிறேன்.. அசத்தும் சங்கீதா
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி
கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!
சுகந்தி மனசில் மாற்றம்... புது வசந்தம் (3)
தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்
சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
ஜெயிலர் 2.. பிரமாண்ட ஆக்ஷன் திருவிழா.. ரஜினியுடன் இன்னொரு விருந்தும் ரெடியாகப் போகுதாம்!
என்னை விட்ருங்க... நான் விலகிக்கிறேன்.. சதானந்தன் மாஸ்டரை அமைச்சராக்குங்க.. சுரேஷ் கோபி
{{comments.comment}}