சென்னை: தவெகவுக்கு பல முன்னாள் அமைச்சர்கள் வரப் போவதாக அக்கட்சியில் சமீபத்தில் இணைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியிருப்பது கவனம் ஈர்த்துள்ளது.
செங்கோட்டையன் சொல்வது யாரை.. யாரையெல்லாம் தவெக தரப்பு அணுகியுள்ளது.. இவர்களை எல்லாம் தவெகவுக்கு அழைத்து வருவது யார்.. இந்த முன்னாள் அமைச்சர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்களா அல்லது திமுகவைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்களா என்று பல்வேறு விதமான கேள்விகள் எழுந்துள்ளன.
காரணம், இரு கட்சிகளிலும் பதவி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதிருப்தியில் இருப்பவர்கள் பலர். அப்படிப்பட்டவர்களை ஒன்று திரட்டி தங்களுடன் இணைக்கும் முயற்சியில் தவெக இறங்கியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னதாக, வெள்ளிக்கிழமை கோபிசெட்டிபாளையத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய கே.ஏ.செங்கோட்டையன், டிசம்பர் மாதம் சில அரசியல் கட்சிகள் தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என்றும், அதன் மூலம் கட்சி மேலும் வலுப்பெறும் என்றும் கூறினார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவருமான செங்கோட்டையன், வியாழக்கிழமை விஜய்யின் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். அதன் பிறகு முதல் முறையாக கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த அவரை, அவரது புதிய கட்சியின் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், விஜய்யுடன் வாழ்நாள் முழுவதும் இருப்பேன் என்றும், மக்கள் சக்தியின் எழுச்சியை எந்த சக்தியாலும் தோற்கடிக்க முடியாது.
விஜய், தமிழ்நாட்டிற்கு நல்லாட்சியை கொண்டுவரும் தைரியத்துடன் கட்சியை உருவாக்கியுள்ளார். மக்கள் 2026-ல் விஜய்யை முதலமைச்சராக்குவார்கள். அவர் மக்கள் சக்தியின் மூலம் தமிழ்நாட்டில் மாற்றத்தை உருவாக்கவும், ஒரு புதிய சமூகத்தை உருவாக்கவும், நேர்மையான அரசை நிறுவவும் புறப்பட்டுள்ளார். விஜய் தனது லாபகரமான தொழிலை மக்களுக்காக மட்டுமே விட்டுக்கொடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் செங்கோட்டையன், அதிமுகவைச் சேர்ந்த பலரை தவெக பக்கம் கொண்டு வர திட்டமிட்டுள்ளாராம். இதன் மூலம் கொங்கு மண்டலத்தில் அதிமுகவைப் பலவீனப்படுத்தி, எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி தரவும் அவர் தீவிரமாக உள்ளாராம். தன்னை அதிமுகவை விட்டு நீக்கிய எடப்பாடி பழனிச்சாமிக்கு, விஜய்யை வைத்தே பதிலடி கொடுத்து பழி வாங்கும் நோக்கில் அவர் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}