ராமர் கோவில் திறப்பு விழா.. காங்கிரஸைத் தொடர்ந்து.. சமாஜ்வாடியும் புறக்கணிப்பதாக.. அதிரடி அறிவிப்பு

Jan 11, 2024,05:42 PM IST

டெல்லி : ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க போவதாக காங்கிரஸ் தளத்தில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  என்ன காரணத்திற்காக புறக்கணிக்கிறார்கள் என்பதையும் அந்த அறிக்கையில் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது. 


காங்கிரஸ் மட்டுமல்லாமல் சமாஜ்வாடிக் கட்சியும் தற்போது இந்த விழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இந்தியா கூட்டணிக் கட்சிகள் இந்த விழாவைப் புறக்கணித்தால், ராமர் கோவில் விழா கிட்டத்தட்ட பாஜக கூட்டணியின் விழாவாக தோற்றமளிக்கும் சூழல் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


அயோத்தியில் ரூ.18,000 கோடி செலவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ராமர் கோவில் ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்கு நாட்டில் உள்ள 6000 க்கும் அதிகமான விஐபி.,க்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, அதிர்ரஞ்சன் செளத்ரி ஆகியோருக்கு கடந்த மாதம் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க போவதாக காங்கிரஸ் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.




அந்த அறிக்கையில், ராமரை நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் வழிபடுகிறார்கள். மதம் என்பது அவரவர்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால் அயோத்தி ராமர் கோவிலை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக நீண்ட காலமாக அரசியல் திட்டமாக மாற்றி உள்ளது. தற்போது முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் கோவிலை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்சிகள் தங்களின் தேர்தல் ஆதாயத்திற்காக தான் அவசர அவசரமாக திறக்கிறார்கள். 


2019ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பையும், கோடிக்கணக்கான ராம பக்தர்களின் நம்பிக்கையையும், மத உணர்வுகளையும் நாங்கள் மதிக்கிறோம். முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக.,வின் அரசியல் நிகழ்ச்சியாக இது நடத்தப்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி இதனை புறக்கணிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.


சமாஜ்வாடிக் கட்சியும் புறக்கணிப்பு


இதேபோல உத்தரப் பிரதேச மாநிலத்தின் மிக முக்கியக் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியுமான சமாஜ்வாடிக் கட்சியும் இந்த விழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து பாஜக ராமரை வைத்து அரசியல் செய்கிறது. இதில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என்று அக்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.


இதற்கிடையே, காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி யாத்திரை துவக்க திட்டமிட்டுள்ள மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள palace ground பகுதியில் யாத்திரை நடத்த அம்மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது. ஆனால் எப்படி இருந்தாலும் யாத்திரை நடந்தே தீரும் என காங்கிரசின் வேணுகோபால் உறுதியாக தெரிவித்துள்ளார். 


யாத்திரைக்கு அனுமதி வழங்க மறுத்ததால் அம்மாநில முதல்வர் குறித்து காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தும் வருகிறது. இதனால் ஜனவரி 14ம் தேதி மணிப்பூரில் என்ன நடக்குமோ என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்