கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

Oct 13, 2025,06:21 PM IST

சென்னை: கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது தமிழ்நாடு காவல்துறை படையை அவமதிப்பதாகத்தான் நான் பார்க்கிறேன். விசாரணையை தொடங்குவதற்கு முன்பாகவே சிபிஐக்கு வழக்கை மாற்றியது ஏன்?  என்று உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.


கரூரில் 41 பேர் இறந்தது தொடர்பாக, இன்று காலை சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கை இனி சிபிஐ விசாரிக்கும். ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலையிலான 3 பேர் கொண்ட குழு இந்த சிபிஐ விசாரணையை கண்காணிக்கும். இந்தக் குழுவில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், சிபிஐ விசாரணையை நாங்கள் எப்போதும் ஏற்பதில்லை. மாநில உரிமை, தன்னாட்சிக்கு எதிரானது. அதனை எப்போதும் ஒரு அவமதிப்பாக பார்க்கிறேன்.




எங்களுடைய காவல் துறை விசாரணையில் என்ன குறை. அரசு தோல்வியை ஒத்துக்கொள்கிறதா? சிபிஐயில் இருக்கும் அதிகாரிகளுக்கு 2 அல்லது 3 மூளைகள் உள்ளதா?இத்தனை ஆண்டுகளில் சிபிஐ வசாரித்து நிரூபித்த பெரிய வழக்கு எதாவது இருக்கிறதா? நீதிமன்றங்கள், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் துறை, மத்திய புலனாய்வுத் துறை எல்லாம் தன்னாட்சி அமைப்புகள் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். அது ஆட்சியாளர்களின் 5 விரல்களைப் போன்றது. சிபிஐ விசாரணையில் என்ன கிடைக்கப் போகிறது. சிறந்த தமிழ்நாடு காவல்துறையை அவமதிக்கிறார்கள்.


சிபிஐ விசாரணை என்பது காலத்தை கடத்தி விடுவதும், அதனை மறக்கடித்து வேறு பக்கம் திருப்பி விடுவது தான். 2 மாதத்தில் விசாரணையை முடித்து சிபிஐ அறிக்கை தாக்கல் செய்யுமா?. இப்போதகைக்கு விசாரணை சிபிஐயிடம் இருக்கிறது. அதனால நாம் ஒன்றும் பேச முடியாது. இது ஒரு தேச அவமதிப்பு. மாநில அவமதிப்பு. தமிழ்நாடு காவல்துறை படையை அவமதிப்பதாகத்தான் நான் பார்க்கிறேன். விசாரணையை தொடங்குவதற்கு முன்பாகவே சிபிஐக்கு வழக்கை மாற்றியது ஏன் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்