சென்னை: தமிழ்நாடு சட்டசபையின் நடப்பு ஆண்டுக்கான முதல் கூட்டம் நாளை காலை சென்னை தலைமை செயலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
ஆண்டின் தொடக்க சட்டசபை கூட்டம் வழக்கமாக ஆளுநர் உரையுடன் துவங்குவது மரபாக இருந்தாலும், இம்முறை அந்த உரை நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் உருவாகியுள்ளது. காரணம் கடந்த காலங்களில் ஆளுநர் ஆர். என். ரவி. பல்வேறு காரணங்களுக்காக ஆளுநர் உரையை முழுமையாக படிக்காத நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய கூட்டம் காலை தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஆளுநர் உரை இடம்பெற வேண்டிய நடைமுறை இருப்பினும், கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட சில அரசியல் நிகழ்வுகள் காரணமாக இந்த முறையிலும் ஆளுநர் உரை முழுமையாக நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
முன்னதாக நடைபெற்ற சட்டசபை கூட்டங்களில் ஆளுநர் உரை தொடர்பாக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் வெளிப்பட்டன. சில சந்தர்ப்பங்களில் உரை முழுமையாக வாசிக்கப்படாததும், சில அம்சங்கள் தவிர்க்கப்பட்டதுமாக அரசியல் சூழல் சூடுபிடித்தது. இதன் தொடர்ச்சியாகவே இந்த ஆண்டின் கூட்டத்தொடர் தொடக்க நாளில் ஆளுநர் உரை குறித்து மீண்டும் விவாதம் எழுந்துள்ளது.
இன்னும் சில மாதங்களில் தமிழ்நாடு சட்டசபையின் ஆயுட்காலம் முடியப் போகிறது. சட்டசபைக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இந்த கூட்டத்தொடரில் அரசு சார்பில் முக்கிய அறிவிப்புகள், வளர்ச்சி திட்டங்கள், சட்ட மசோதாக்கள் உள்ளிட்டவை முன்வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அரசின் கொள்கை விளக்கங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து சபையில் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபபைத் தேர்தலை கருத்தில் கொண்டு ஆளுநர் உரையில் பல முக்கிய அம்சங்களை தமிழ்நாடு அரசு இடம் பெறச் செய்யலாம் என்றும் கருதப்படுகிறது. ஆனால் ஆளுநர் இதையெல்லாம் வாசிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. எனவே ஆளுநர் உரை சுமூகமாக நடைபெறுமா, அல்லது வழக்கமான நடைமுறையில் மாற்றம் ஏற்படுமா என்பதை அரசியல் கட்சிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆவலுடன் கவனித்து வருகின்றனர்.
2026ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம்.. நாளை கூடுகிறது.. ஆளுநர் உரையாற்றுவாரா?
அடுத்த திட்டம் என்ன?...ஆதரவாளர்களுடன் சசிகலா தீவிர ஆலோசனை
கரூர் வழக்கு.. டெல்லி சிபிஐ விசாரணையில் நடப்பது என்ன.. விஜய்யிடம் கேட்கப்படும் கேள்விகள் என்னென்ன?
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.. இதுவரை 12.80 லட்சம் பேர் மனு
மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் தெறி ரீ ரிலீஸ்...காரணம் இது தானா?
71 மாவட்டங்களுக்கும் தலைவர்கள்.. ஒரு வழியாக அறிவித்தது காங்கிரஸ்!
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,360 உயர்வு
அமைதி .. சத்தம் இல்லாமல் வந்தபோது...!
சிவபெருமானின் முழு அருளை பெற இந்நன்நாளை தவற விடாதீர்கள்
{{comments.comment}}