புஷ்பா-2.. ஜாமினை ரத்து செய்யக் கோரி.. சுப்ரீம் கோர்ட்டை அணுகும் போலீஸ்.. அல்லு அர்ஜூனுக்கு சிக்கல்

Dec 18, 2024,02:03 PM IST

ஹைதராபாத்: புஷ்பா 2 படத்தின் முதல் நாள் காட்சி விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தெலங்கானா போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.


சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் புஷ்பா 2. இந்த படம் கடந்த 5ம் தேதி உலகம் முழுவதிலும் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.இந்த படத்தின் முதல் காட்சியை காண ஹைதராபாத்தில் உள்ள பிரபல சந்தியா தியேட்டருக்கு திடீரென அல்லு அர்ஜூன் வந்துள்ளார். அவரது வருகையைத் தொடர்ந்து அவரைப் பார்க்க அவரது ரசிகர்கள் முண்டியடித்தனர். ஆயிரக்கணக்கில் கூடியிருந்த ரசிகர்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு அவரைப் பார்க்க முயன்றதால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.




இந்த கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் சிக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகனும் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அல்லு அர்ஜூன் வருகை குறித்து முன்கூட்டியே காவல்துறையிடம் தெரிவிக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் தேவையான முன்னேற்பாடுகளை தியேட்டர் நிர்வாகம் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.


இதனையடுத்து சந்தியா தியேட்டர் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அல்லு அர்ஜூன் மீதும் போலீஸார் கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யது அவரை கைது செய்தனர். அதன் பின்னர் கோர்ட்டில் அல்லு அர்ஜூன் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்குப் பின்னர் அவரை 14 நாள் சிறைக் காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. அவர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், ஜாமின் கோரி தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் அல்லு அர்ஜூன் சார்பில்  மனு செய்யப்பட்டது. இதை விசாரித்த ஹைகோர்ட், அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமின் அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து  சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட அல்லு அர்ஜுன் விடுதலை செய்யப்பட்டார்.


இந்நிலையில், உயிரிழந்த அப்பெண்ணின் 8 வயது மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூளைச்சாவு என்ற நிலையில் இருந்து வருகிறார். அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதையடுத்து புஷ்பா 2 படத்தின் முதல் நாள் காட்சி விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தெலங்கானா போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த தகவலால் அல்லு அர்ஜூனுக்கு தற்போது மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒரு வேளை இடைக்கால ஜாமினை உச்சநீதமன்றம் ரத்து செய்தால் அல்லு அர்ஜூன் மீண்டும் சிறை செல்ல வேண்டியிருக்கும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

டெல்லியில் கட்டாயமாகிறது work from home...ஊழியர்கள் மகிழ்ச்சி

news

அமைதியாகவே இருந்தால் எப்படி? ஏதாவது சொல்லுங்க...விஜய்யை விளாசிய அண்ணாமலை

news

True love has no expiry date.. உண்மைதானே.. காதலுக்கு எக்ஸ்பைரி வைக்க முடியுமா!!

news

அண்ணாவின் பெயரைக் கட்சி பெயரில் வைத்துக்கொண்டு, இதை எதிர்க்கக் கூடவா தயக்கம்: முதல்வர் முக ஸ்டாலின்

news

தமிழகத்தில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு... எங்கெல்லாம் தெரியுமா? இதோ வானிலை கொடுத்த அப்பேட்!

news

விஜய் பிரசாரம்... ஈரோட்டில் தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை

news

வேலூர் ஶ்ரீபுரம் பொற்கோவிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம்

news

OVERCOMING STRUGGLES.. சவால்களை நொறுக்கி.. சாதனைகளைப் படைப்போம்!

news

தங்கம் விலை இன்றும் உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை உயர்வு!

அதிகம் பார்க்கும் செய்திகள்