சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்தால் நல்லாருக்குமே என்று எதிர்பார்க்கிறார்கள். இதுதொடர்பாக அரசுக்கும் கோரிக்கை போயுள்ளதாம்.
அக்டோபர் 20 அன்று திங்கட்கிழமை தீபாவளி வருவதால், அதற்கு முந்தைய சனி, ஞாயிறு விடுமுறையுடன் சேர்த்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. பயண சிரமங்களைக் கருத்தில் கொண்டு, தீபாவளிக்கு அடுத்த நாளான அக்டோபர் 21 செவ்வாய்க்கிழமையையும் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என தலைமைச் செயலகச் சங்கம் மற்றும் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. இந்த கோரிக்கை ஏற்கப்பட்டால், மொத்தம் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 20, திங்கட்கிழமை அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. ஏற்கனவே அக்டோபர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. இது பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இருப்பினும், பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று தீபாவளியைக் கொண்டாடுவார்கள். இதனால் தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு கிடைத்தால் நல்லாருக்குமே என்பது அவர்களது அபிப்பிராயம் ஆகும்.
இதுதொடர்பாக தலைமைச் செயலகப் பணியாளர்கள் சங்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "தீப ஒளித் திருநாளாம் தீபாவளிப் பண்டிகை வரும் 20ம் தேதி திங்கட்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என பெரும்பான்மையானோர் தங்களது குடும்பத்தினருடன் சொந்த ஊரில் கொண்டாடுவது வழக்கம். ஆனால், தீபாவளி திங்கட்கிழமை வருவதால், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து வெளியூர் செல்லும் பணியாளர்கள் 21-ம் தேதி செவ்வாய்க்கிழமை பணிக்குத் திரும்புவதில் மிகுந்த சிரமம் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, தீபாவளியை குடும்பத்தினருடன் சொந்த ஊரில் கொண்டாடும் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தீபாவளிக்கு மறுநாள் 21ம் தேதி ஒருநாள் மட்டும் ஈடுசெய்யும் விடுமுறை வழங்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளது.
இதேபோல், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கமும் அரசுக்கு இதே கோரிக்கையை முன்வைத்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தீபாவளி பண்டிகைக்கு மூன்று நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நாளில், பெரும்பாலான அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், அரசுப் பணியாளர்கள் தங்களது சொந்த ஊருக்குக் குடும்பத்துடன் செல்வார்கள். பொதுப் போக்குவரத்துக்கும் கடுமையான கூட்ட நெரிசல் இருக்கும். எனவே, தீபாவளிக்கு அடுத்த நாள் 21ம் தேதி செவ்வாய்க்கிழமை அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தமிழ்நாடு அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக, அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, தீபாவளிக்கு அடுத்த நாளும் விடுமுறை அறிவிப்பது தமிழக அரசின் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த முறையும் அதேபோல் விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் ஓரிரு நாட்களில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பயணங்களை எளிதாக்குவதோடு, குடும்பத்துடன் பண்டிகையை சிறப்பாக கொண்டாடவும் உதவும். பொதுப் போக்குவரத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலையும் இது ஓரளவு குறைக்கும். இந்த விடுமுறை அறிவிப்புக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கரூர் துயர சம்பவம்...விஜய் தாமதமாக வந்ததே காரணம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கம்!
கரூர் சம்பவம்...முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது: சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி!
லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு: நடிகர் விஷால் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
தீபாவளி வருது.. 4 நாளா லீவு கிடைச்சா நல்லாருக்கும்.. எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்!
கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்: அன்புமணி ராமதாஸ்!
வானிலை விடுத்த எச்சரிக்கை: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!
தமிழ்க் கலாச்சாரத்தைக் கேவலப்படுத்தும் பிக் பாஸ்.. தடை செய்யுங்கள்.. த.வா.க. வேல்முருகன் ஆவேசம்
பீகார் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்.. நிதீஷ் குமார் தோற்பார்.. பிரஷாந்த் கிஷோர்
எல்லாமே பக்காவா செட் ஆயிருச்சு.. வட கிழக்கு பருவ மழை இன்று அல்லது நாளை தொடங்கலாம்!
{{comments.comment}}