சென்னை : கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு தமிழக அரசியலில், குறிப்பாக தவெகவின் அரசியல் எப்படி இருக்கும்.. விஜய்யின் பிரச்சாரம் எப்படி இருக்க போகிறது என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
விஜய் எப்போது மீண்டு வருவார்.. அடுத்து என்ன செய்ய போகிறார்? அவரது அடுத்தடுத்த பிரச்சாரங்களுக்கு எந்த மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்? அப்படி நடத்தப்படும் கூட்டங்களுக்கு கூட்டம் வருமா, மறுபடியும் இதேபோல கூட்டம் வந்தால் அதை எப்படி சமாளிப்பார் என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.
கரூரில் சமீபத்தில் தவெக நடத்திய பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்டு தவெக சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்யப்பட்டுள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, விஜய் மீது தவறில்லை. அவரது பிரச்சார வடிவம்தான் தவறு. அவரது கட்சியினரும் கட்டுப்பாடு காக்க வேண்டும். மீண்டு வந்து அவர் அரசியல் செய்ய வேண்டும். தனது பிரச்சார வடிவத்தை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். கரூர் சம்பவத்தை அடுத்து, அடுத்த வாரம் தவெக கட்சியின் பிரச்சார சுற்றுப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே விஜய்யின் பிரச்சார சுற்றுப் பயணத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தது. தற்போது கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்யின் பிரச்சாரத்திற்கு இன்னும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வாய்ப்புள்ளது. அனுமதி கிடைப்பதே இனி குதிரைக் கொம்பாகும் அபாயமும் உள்ளது. காரணம், விஜய் மீதான அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு நிச்சயம் குறைய வாய்ப்பில்லை. விஜய் வருகிறார் என்றாலே கண்டிப்பாக மீண்டும் அவர்கள் கூடுவார்கள். காரணம், விஜய் மீது அவர்கள் வைத்துள்ள அன்பு அந்த அளவுக்கு உள்ளது.
ஆனால் மற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு இல்லாமல், விஜய்க்கு மட்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தால் விஜய் கண்டிப்பாக கோர்ட்டை அணுகி தனக்கும் சம உரிமை வழங்க உரிமை கோர வாய்ப்புள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் பிரச்சாரங்களுக்கும், கூட்டம் சேருவதற்கும் மிக கடுமையான விதிகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. மற்றவர்களுக்கு இதுபோல பிரச்சினை வருவதில்லை. காரணம் பிற கட்சிகளுக்கு விஜய்யைப் போல தன்னெழுச்சியாக கூட்டம் வருவதில்லை என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும்.
கரூரில் விஜய்யை பார்க்க வந்தவர்களில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அனைத்து தரப்பு மக்களை அதிர வைத்துள்ளது. இதனால் இனி விஜய் பிரச்சாரம் செய்ய வரும் இடங்களில் கூட்டம் மிக அதிக அளவில் சேருவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கரூர் சம்பவம் தங்கள் பகுதியிலும் நடந்து விடுமோ என்ற அச்சம் இனி இயல்பாக எழவும் வாய்ப்புள்ளது.
இப்போதைக்கு விஜய் முன்பு உள்ள ஆப்ஷன் - அவரது பிரச்சார வடிவம் மாற்றப்பட வேண்டும். கூட்டங்களுக்கு உரிய நேரத்தில் போக வேண்டும். முடிந்தவரை சாலை மார்க்கமாக போகாமல் ஹெலிகாப்டர் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தலாம். அவரது தொண்டர்களும் வாகனத்தின் பின்னாடியே வராமல் கட்டுப்பாடு காக்க வேண்டும். வார இறுதியில் போவதற்குப் பதில் இடை இடையேயும் போக வேண்டும். இதுபோன்ற சாலையோர பேரணிகள் போல நடத்தாமல் பொதுக் கூட்டம் போல ஊருக்கு வெளியே போடலாம். இப்படி நிறைய மாற்றங்களை விஜய்யும் செய்ய வேண்டும், அவரது ரசிகர்களும் நிறைய மாற வேண்டும். அப்படி நடந்தால்தான் விஜய்யின் அரசியல் சுமூகமாக இருக்கும்.
சொந்த தந்தையைக் கூட கொச்சைப்படுத்துபவரின் கருத்தை.. அன்புமணிக்கு அன்பில் மகேஷ் பதிலடி
அழுவது போல் நடித்த உத்தமரா இன்று அழுகையைப் பற்றிப் பேசுவது?.. அன்பில் மகேஷ் தாக்கு!
விஜய் எப்போது மீண்டு வருவார்.. Weekend பிரச்சார வடிவம் மாறுமா?.. இதே கூட்டம் இனி வருமா??
சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி 2025 : வழிபடுவதற்கான நல்ல நேரம், வழிபடும் முறை
இன்று நவராத்திரி 9ம் நாள்...அம்பிகையை வழிபடும் முறை, மலர், பிரசாதம் விபரம்
ஆயுத பூஜை .. சரஸ்வதி பூஜை .. கல்விக்கும், தொழிலுக்கும் நன்றி செலுத்தும் தினம்!
வழிபாடு என்பது என்ன? .. What is Prayer!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 30, 2025... இன்று நினைத்தது நிறைவேறும் நாள்
கரூர் துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு, வதந்திகளை பரப்ப வேண்டாம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
{{comments.comment}}