வெற்றியும் தோல்வியும்.. வாழ்வின் இரு கண்கள்

Jan 08, 2026,05:48 PM IST

- டி. ஜெனிட்டா ரீனா


வெற்றி என்பது மகுடத்தைப் பெற்றுக்கொள்வது, 

தோல்வி என்பது வாழ்வைக் கற்றுக்கொள்வது!

வெற்றி தரும் தருணம் ஒரு மகிழ்ச்சி

தோல்வி செதுக்கும் இதயம் ஒரு வலிமை!

அறிவின் முதிர்ச்சியில் கிடைப்பது வெற்றி




அனுபவத்தின் முதிர்ச்சியில் பிறப்பது தோல்வி!

நிறுத்தமில்லாத ஓட்டம் வெற்றியின் தொடர் பயணம்

தளராத நம்பிக்கையே தோல்வியின் தொடர் முயற்சி!

துணிச்சல் காட்டும் ஒரு சாகசம் வெற்றி

உண்மையை உணர்த்தும் ஒரு சத்தியம் தோல்வி!

பாராட்டுகள் சூட்டும் மாலைகள் வெற்றியின் பரிசு

சோதனைகளை வெல்லும் வித்தையே தோல்வியின் வரிசு!

உச்சம் தொடுபவன் உலகிற்கு ஒரு சாதனையாளன்

உயரத் துடிப்பவன் தனக்குத்தானே ஒரு சோதனையாளன்!

அடைய வேண்டிய தூரம் வெற்றியின் இலக்கு

பயணத்தில் பங்கேற்றதே போராட்டத்தின் முதல் வெற்றி!


(டி. ஜெனிட்டா ரீனா, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்