டில்லி : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, லோக்சபா தேர்தல் 2024 ல் தான் போட்டியிட்ட கேரளாவின் வயநாடு, உ.பி., மாநிலத்தில் உள்ள ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிக அளவிலான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் இவர் அடுத்து என்ன செய்ய போகிறார்? எந்த தொகுதியை வைத்துக் கொண்டு, எந்த தொகுதியின் எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2019 லோக்சபா தேர்தலிலும் ராகுல் காந்தி வயநாடு மற்றும் உ.பி.,யின் அமேதி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தலில் அமேதி தொகுதியில் தோல்வி அடைந்ததால், வயநாடு தொகுதி எம்.பி.,யாக இருந்து வந்தார். ஆனால் இந்த முறை அமேதி தொகுதிக்கு பதிலாக உ.பி.,யில் தனது தாய் சோனியா காந்தியின் தொகுதியும், காங்கிரசின் மற்றொரு கோட்டையாகவும் கருதப்படும் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டார். இந்த இரண்ட தொகுதிகளிலும் அதிக எண்ணிக்கை வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றியும் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டில் எந்த தொகுதியை வைத்துக் கொண்டு, எந்த தொகுதியை அவர் ராஜினாமா செய்வார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ராகுல் காந்தி ஏற்கனவே வயநாடு தொகுதி எம்.பி.,யாக இருந்ததால் இந்த முறை அவர் வயநாடு தொகுதி எம்.பி., பதவியை ராஜினாமா செய்வதால் அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள போவதில்லை. அதே சமயம் தற்போது சோனியா காந்தியும் ராஜ்ய சபாவிற்கு சென்று விட்டதால், ரேபரேலி தொகுதி எம்.பி.,யாக ராகுல் காந்தி இருப்பது வட மாநிலங்களில், குறிப்பாக உத்திர பிரதேசம் போன்ற இந்தி பேசும் மாநிலங்களில் மீண்டும் காங்கிரஸ் புத்துயிர் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.
பிரியங்கா போட்டியிடுவாரா?
ஒருவேளை ராகுல் காந்தி, வயநாடு தொகுதி எம்.பி., பதவியை ராஜினாமா செய்தால், அந்த தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும். அப்படி நடத்தப்படும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அவரது சகோதரி பிரியங்கா வதேரா வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஏனென்றால், ஏற்கனவே ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும், பிரியங்கா காந்தி ரேபரேலியிலும் தான் போட்டியிட உள்ளதாக பேச்சுக்கள் எழுந்தன. கடைசி நேரத்தில் அமேதியில் போட்டியிடாமல் வயநாட்டில் மட்டும் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்ததால், இந்த முறை அமேதியில் பிரியங்கா வேட்பாளராக நிறத்தப்படலாம் என்று சொல்லப்பட்டது.
ஆனால் கடைசி வரை பிரியங்கா காந்தியின் பெயரை கட்சி தலைமை பரிந்துரை செய்யாததால் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், அந்த அதிருப்தியால் கட்சியே இரண்டாக உடையும் நிலை உள்ளதாகவும் பிரியங்காவின் முன்னாள் உதவியாளரே சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். ராகுல் காந்தி போட்டியிட்டு தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றி பெற்றதால், வயநாடு தொகுதியும் தற்போது காங்கிரசின் கோட்டையாகவும், விஐபி தொகுதியாகவும் மாறி உள்ளது. இதனால் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், அதில் பிரியங்கா காந்தி வேட்பாளராக நிறுத்தப்பட்டால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஒரு வேளை பிரியங்காவை வடக்கு முகமாகவே கருத காங்கிரஸ் தீர்மானித்தால் ரேபரேலியில் பிரியங்காவை நிறுத்தி விட்டு, ராகுல் காந்தி, வயநாடு எம்.பியாகவே தொடர வாய்ப்புள்ளது. அப்படி நேரும் பட்சத்தில் நாடாளுமன்றத்தில் சோனியா காந்தி - ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி ஆகியோரின் மும்முனைத் தாக்குதலை எதிர்பார்க்கலாம்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}