சென்னை: காற்றின் வேக மாறுபாடுதான் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதில் தாமதம் ஏற்பட முக்கியக் காரணம் என்று தனியார் வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இரவு புயலாக மாறும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டனம், கடலூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் திடீரென புயல் சின்னத்தின் வேகம் படு வேகமாக குறைந்து விட்டது. மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்த புயல் சின்னம் தற்போது 3 கிலோமீட்டர் வேகத்தில்தான் நகர்ந்து வருகிறது. இதனால் புயல் சின்னம் பலவீனமடைகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், காற்று அதீத வேக மாறுபாட்டைக் காட்டுவதால் ஆழ்ந்த காற்றழுத்தமானது புயலாக மாறுவதற்கும் வலுவடைவதற்கும் பெரும் தடையாக உள்ளது. அப்படியே அது வலுவடைந்தாலும் சற்றே வலுடையக் கூடும். தமிழ்நாட்டுக் கரையை அடையும்போது புயல் சின்னம் மேலும் வலுவடைவதை தடுக்கவும் கூடும். எனவே இது புயலாக மாறினாலும் கூட சக்தி வாய்ந்த புயலாக இருக்காது. லேசான புயலாக மாறி பின்னர் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக இது மாறி விடும்.
நாளை டெல்டா முதல் சென்னை கடற்கரைகளில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம். பெரிய அளவில் எதிர்பார்க்க முடியாது. நவம்பர் 29ம் தேதி முதல் மழை வேகம் பிடிக்கும் என்று கூறியுள்ளார் வெதர்மேன் பிரதீப் ஜான்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
தமிழக காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் செல்கிறது: ஜோதிமணி எம்.பி.,
அச்சச்சோ.. ஆமாங்க இப்ப தாங்க வலிக்குது.. தங்கமே தங்கம்!
பராசக்திபட வெளியீட்டிற்கு தடை விதக்க மறுப்பு: சென்னை உயர்நீதிமன்றம்
ஜனநாயகன்: ஜனவரி 4 முதல் டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்
தமிழ்ப் படத்துக்கு தமிழ்நாட்டில் தியேட்டர்கள் இல்லை.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குமுறல்!
வைகோ நடைபயணம்... திருச்சியில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கடந்த 4 நாட்கள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்வு..சவரனுக்கு ரூ.1,120 உயர்வு!
ஏறிக் கொண்ட போகும் தங்கம் விலை.. காரணம் என்ன.. இதுக்கு என்ட் கார்டே கிடையாதா?
{{comments.comment}}