அக்னி சிறகுகள்.. சிந்தனைக்கு தீப்பொறி கொடுத்த வாழ்க்கை வரலாறு

Dec 29, 2025,10:29 AM IST

- வே.ஜெயந்தி


ஒரு அழகான மதிய நேரம்.. சாப்பிட்ட மயக்கம் எல்லோருக்கும் இருக்கும் அல்லவா.. ஆனால் என்னை வாசிப்பு மயக்கம் மெல்லத் தீண்டியது. புத்தக அலமாரிக்குள் கைகள் நுழைந்து துழாவின.. அதில் தட்டுப்பட்ட ஒரு புத்தகத்தை எடுத்தேன்.. "அக்னிச் சிறகுகள்".. படித்த புத்தகமாக இருந்தாலும், எப்போதுமே அது என்னைப் புதிய புத்தகம் போலவே கவர்ந்திழுக்கும்.. என்னை மட்டுமா.. எல்லோருக்கும் அப்படித்தானே!


டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் அக்னி சிறகுகள் நூல், ஒரு தனிநபரின் வாழ்க்கைப் பதிவாக மட்டும் இல்லாமல், சிந்தனைக்கும் செயலுக்கும் திசை காட்டும் சமூக ஆவணமாகத் திகழ்கிறது. எளிமையான சூழலில் தொடங்கிய ஒரு வாழ்க்கை, தொடர் முயற்சியும் தன்னம்பிக்கையும் இணைந்தால் எவ்வாறு உயர்ந்த சாதனைகளாக மாறும் என்பதைக் இந்த நூல் நிதானமாகவும் ஆழமாகவும் எடுத்துரைக்கிறது. இந்த நூலின் மையச் சொல் கனவு. கனவு என்பது கற்பனை அல்ல; வாழ்க்கையை இயக்கும் சக்தி.


“கனவு என்பது உறங்கும்போது காண்பது அல்ல; உறங்க விடாமல் செய்யும் எண்ணமே உண்மையான கனவு”

என்ற வரி, இலக்குடன் கூடிய வாழ்க்கைக்கான அடையாளமாக மாறியுள்ளது. கனவுகள் தெளிவான இலக்குகளாக மாறும் போது, மனித முயற்சிகள் திசைபெற்று அர்த்தம் பெறுகின்றன.




வாழ்க்கைப் பயணத்தில் தோல்விகள் தவிர்க்க முடியாதவை. அக்னி சிறகுகள் தோல்வியை பயப்பட வேண்டிய ஒன்றாக அல்ல; வளர்ச்சிக்கான அனுபவமாகவே முன்வைக்கிறது. “தோல்வி ஒரு முடிவு அல்ல; அது வெற்றிக்கான முதல் பாடம் என்ற சிந்தனை, மனம் தளரும் தருணங்களில் புதிய உற்சாகத்தை அளிக்கிறது. வீழ்ச்சி முடிவாக அல்ல, எழுச்சிக்கான தொடக்கமாகவே இந்நூலில் பார்க்கப்படுகிறது.


இந்த நூலில் ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டிகளின் பங்கு சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவரின் வாழ்க்கைத் திசையை மாற்றும் சக்தி ஒரு நல்ல வழிகாட்டியின் வார்த்தைகளில் இருக்கிறது என்பதைக் கலாமின் அனுபவங்கள் உணர்த்துகின்றன.


“அறிவு வழிகாட்டல் இல்லாமல் பயனற்றது; வழிகாட்டல் அறிவுடன் இணைந்தால் சாதனை” என்ற மேற்கோள், கல்வியின் உண்மையான நோக்கத்தை தெளிவுபடுத்துகிறது.


உயர்ந்த பதவிகளிலும் எளிமை, ஒழுக்கம், நேர்மை ஆகிய மதிப்புகளை விடாமல் கடைப்பிடித்த வாழ்க்கை, அக்னி சிறகுகள் நூலின் மற்றொரு முக்கிய அம்சமாக விளங்குகிறது.


“எளிமை மனிதனை சிறியவனாக்காது; அவனை உயர்வாக்குகிறது” என்ற வரி, வெளிப்புற வெற்றிகளை விட உள்ளார்ந்த பண்புகளே நிலைத்த மதிப்பை அளிக்கும் என்பதை நினைவூட்டுகிறது.


அறிவு, உழைப்பு, நம்பிக்கை ஆகிய மூன்றும் ஒன்றிணையும் போது அசாதியம் சாத்தியமாகிறது என்பதே இந்த நூல் முன்வைக்கும் அடிப்படைச் செய்தி.


“உழைப்புடன் கூடிய நம்பிக்கை, அசாதியத்தை சாத்தியமாக மாற்றும்” என்ற சிந்தனை, நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒலிக்கிறது.


அக்னி சிறகுகள் ஒரு வாழ்க்கை வரலாறு அல்ல; அது வாழ்க்கையை புதிய கோணத்தில் புரிந்துகொள்ளச் செய்யும் சிந்தனைப் பயணம். “உயரத்தை தீர்மானிப்பது பிறப்பு அல்ல; முயற்சியும் மன உறுதியுமே”


என்ற உறுதியான கருத்துடன், தொடர்ந்து முயன்றால் உயரங்களை எட்ட முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கும் ஒரு தலைமுறை நூலாக இது நிலைத்திருக்கிறது.


மத்தியானத் தூக்கம் பறந்து போய், மனம் முழுக்க தன்னம்பிக்கையும், கண்களில் ஒளியும் படர்ந்து என்னைப் புதிய பரவசத்தில் ஆழ்த்தின.


(வே. ஜெயந்தி, பட்டதாரி ஆசிரியர், செங்கல்பட்டு)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிரச்சினைகள் நீங்கி இன்பமான வாழ்வு பெற ஏகாதசி விரதம் இருப்பது சிறப்பு!

news

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத அவல ஆட்சி... திமுகவினர் கூனிக் குறுக வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

சபரிமலை மண்டல பூஜை காலத்தில் ரூ.332.77 கோடி வருமானம்

news

மலேசியா என்றதும் இனி பிரகாஷ் ராஜ் ஞாபகமும் வரும்.. பார்த்திபன் போட்ட பலே டிவீட்!

news

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைவு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 29, 2025... இன்று நினைத்தது நிறைவேறும்

news

வாழ்வது ஒரு கலை!

news

மார்கழியில் அரங்கனும் இறங்குவான் அக்காரவடிசலுக்கு.. நாமளும் மயங்குவோம்.. சுவைக்கு!

news

எனதருமை எழுதுகோலே...!

அதிகம் பார்க்கும் செய்திகள்