மீண்டும் வருகிறது எல் நினோ..  வெப்ப நிலை  அதிகரிக்கும்.. உலக வானிலை கழகம் எச்சரிக்கை

Mar 04, 2023,02:57 PM IST
லண்டன்:  மீண்டும் எல் நினோ சூழல் வரவுள்ளதாகவும், இதனால்  சர்வதே அளவில் பூமியில் வெப்ப நிலை அதிகரிக்கும் என்றும் சர்வதேச வானிலை கழகம் தெரிவித்துள்ளது.

அடுத்து வரும் சில மாதங்களில் எல் நினோ உருவாகலாம் என்றும் சர்வதேச வானிலைக் கழகம் கணித்துள்ளது.



ஏற்கனவே லா நினா சூழல் ஏற்பட்டு உலக அளவில் வெப்ப நிலை உயர்ந்து பல்வேறு நாடுகளிலும் மழைப் பொழிவு தாறுமாறாக இருந்தது. பல நாடுகளில் மழைப் பொழிவு சுத்தமாக இல்லாமல் வறட்சி தலைவிரித்தாடியது. அதேசமயம் பல நாடுகளில் வரலாறு காணாத மழை வெள்ளம் ஏற்பட்டு பெரும் உயிரிழப்புகளும்,  சேதமும் ஏற்பட்டது நினைவிருக்கலாம்.




இந்த நிலையில் எல் நினோ வரவுள்ளதால் அதேபோன்ற சூழலை உலகம் எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அனேகமாக வரும் மே மாதத்திற்குள் எல் நினோ வரலாம் என்றும் சர்வதேச வானிலைக் கழகம் கணித்துள்ளது.

அது என்ன எல் நினோ.. லா நினா

எல் நினோ மற்றும் லா நினா என்பது மாறி மாறி வரக் கூடிய வானிலை மாற்றங்கள் ஆகும். பசிபிக் கடற் பகுதியில்தான் இது உருவாகும். ஆனால் உலக அளவில் வானிலை மாற்றத்திற்கு இவை முக்கியக் காரணியாக விளங்கும்.

எல் நினோ, லா நினா என்பது ஸ்பெயின் மொழிப் பெயர்களாகும்.  எல் நினோ என்றால் சின்னப் பையன் என்று ஸ்பெயின் மொழியில் அர்த்தமாகும். கடந்த 1600களில்தான் முதல் முறையாக எல் நினோ வானிலை மாற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.  டிசம்பர் மாதம்தான் பெரும்பாலும் எல் நினோ உச்சத்தில் இருக்கும். தென் அமெரிக்க மீனவர்கள்தான் முதல் முதலில் இந்த எல் நினோ சூழலை கண்டறிந்தனர்.  பசிபிக் கடலில் வழக்கத்திற்கு விரோதமான சூழல் இருப்பதை அவர்கள்தான் முதலில் பார்த்தனர். அதன் பிறகுதான் அது எல் நினோ என்று கண்டறியப்பட்டது.

லா நினா என்றால்  சின்னப் பெண் என்று அர்த்தம்.  எல் விஜயோ என்றும் இதை சில நேரம் அழைக்கின்றனர். எல் நினோவுக்கு அப்படியே எதிர் நிலையானது இது. எல் நினோவை விட அதிக அளவிலான வெப்பத்தை லா நினா உள்ளுக்குள் தள்ளும். லா நினாவால் ஆசியாதான் அதிகம் பாதிப்பை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் லா நினாவால் ஐரோப்பிய, தென் அமெரிக்க நாடுகள் கடும் குளிரை சந்திக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி

news

தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?

news

மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?

news

மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!

news

Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

அதிகம் பார்க்கும் செய்திகள்