சென்னை: பிரபல தமிழ் எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.
தேவிபாரதி எழுதிய நீர்வழிப்படூஉம் நூலுக்காக இந்த விருது கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் விழாவில் எழுத்தாளர் தேவிபாரதிக்கு விருதும், அதற்குரிய பரிசும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜசேகரன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் தேவிபாரதி சிறந்த புதின மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். மிகவும் எளிமையான குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர் தேவிபாரதி. 1975 முதல் எழுதி வரும் தேவிபாரதி, சாமானிய மக்களின் வாழ்க்கையைச் சுற்றி தனது எழுத்துக்களத்தை அமைத்துக் கொண்டவர்.
சமூக உளவியல் பிரச்சினைகள் குறித்து நிறைய எழுதியுள்ளார். இடையில் சாலை விபத்தில் சிக்கி பேச முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட இவர் அதிலிருந்து மீண்டு வந்த பின்னர் எழுதிய நூல்களில் ஒன்றுதான் நீர்வழிப்படூஉம். இந்த நாவலுக்குத்தான் தற்போது சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவிலும், டிவி தொடர்களிலும் கூட இவரது பங்களிப்பு இருந்துள்ளது. தமிழ் இலக்கிய உலகின் மிகச் சிறந்த எழுத்தாளுமைகளில் ஒருவரான தேவிபாரதிக்கு சாக்திய அகாடமி விருது கிடைத்திருப்பதை இலக்கிய உலகினர் பாராட்டியும், வாழ்த்தியும் வருகின்றனர்.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}