- தமிழ்மாமணி எழுத்தாளர் இரா.கலைச் செல்வி
அனைவரும் நிஜ சுதந்திரம் பெற்ற பின்,
ஆடுவோம் பள்ளுவும் பாடுவோம்.!
மனிதர்களின் ஏற்றத்தாழ்வுகள் நீங்க வேண்டும்.
மனிதர்களின் ஜாதி மத பேதங்கள் அகல வேண்டும்.
பெண் அடிமைத்தனம் முற்றிலும் ஓழிய வேண்டும்.
பெண்ணின் பாதுகாப்பு எங்கும் வேண்டும்.
பெண்குழந்தை பாலியல் வன்கொடுமை ஒழியவேண்டும்.
குழந்தைத் தொழிலாளர் நிலை முற்றிலும் மாற வேண்டும்.
பெண்களின் பாதுகாப்பு பெருக வேண்டும்.
இரவிலும் பெண்கள் பயமின்றி நடக்க வேண்டும்.

சாதியின்வேர்கள் அடியோடு அழிய வேண்டும்!
ஆணவக் கொலைகள் அகல வேண்டும்!
நீதி துறையில் நேர்மை வேண்டும்.!
நீதி உரிய காலத்தில் கிடைக்க வேண்டும்.!
வறுமையின் கோலம் எங்கும் மறைய வேண்டும்!
வளமானவாழ்வு அனைவருக்கும் கிட்ட வேண்டும்!
நிச்சயமாய் சுதந்திரம் மலர வேண்டும்!
நிரந்தரச் சந்தோஷம் அனைவருக்கும் வேண்டும்!
பெண் கல்வி கற்றும், பெரிய பதவி வகித்தும்,
சரிநிகர் சமானம் கிடைக்கவில்லையே இன்னும்!
அப்பொழுது தான் ஆடுவோம் பாடுவோம்.
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்
என அனைவரும் கூத்தாடி மகிழ்வோம் .
ஆடுவோமே பள்ளு பாடுவோமே..!
(சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக் காதல் கொண்ட அவர், நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர, கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர். சாதனைச் செல்வி, சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை, சேவா ரத்னா , கவிஞாயிறு, கவியருவி, கவிச்செம்மல், உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது, கலைரத்னா போன்ற 30 க்கும் மேற்பட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்)
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}