அரசியலிலிருந்து எதியூரப்பா ஓய்வு..  இறுதிவரை பாஜகவுக்காக பாடுபடுவேன் என உறுதி!

Feb 25, 2023,11:31 AM IST
பெங்களூரு:  தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா அறிவித்துள்ளார். இருப்பினும் இறுதி மூச்சு வரை பாஜகவுக்காக பாடுபடுவேன் என்றும் அவர் உறுதியுடன் கூறியுள்ளார்.



தென் இந்தியாவின் முதல் பாஜக முதல்வர் என்ற பெயரும், பெருமையும் எதியூரப்பாவுக்கு உண்டு. கர்நாடகத்தின் முதல்வராக இருந்தவர். கர்நாடக பாஜகவின் தலைவராக திகழ்ந்தவர். கர்நாடகத்தின் முக்கியமான ஜாதியான லிங்காயத்து சமுதாயத்தினரை பாஜகவின் வாக்கு வங்கியாக மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவர். கர்நாடகத்தில் பாஜக வலுவான நிலையை அடைய எதியூரப்பாவின் தலைமையும், வழிகாட்டுதலும் தான் முக்கியக் காரணம்.



இடையில் கட்சியுடன் ஏற்பட்ட கசப்புணர்வின் காரணமாக தனிக்கட்சி நடத்தினார். பின்னர் மீண்டும் பாஜகவில் இணைந்தார். ஆனால் மீண்டும் பாஜக ஆட்சியமைத்தபோது எதியூரப்பாவுக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை. அவருக்கு ஆளுநர் பதவி கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தீவிர அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் எதியூரப்பா.

சட்டசபையில் நேற்று அவர் பேசியபோது இந்த அறிவிப்பை வெளியிட்டார். எதியூரப்பா கூறுகையில்,  தீவிர அரசியலிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். இருப்பினும் பாஜகவுக்காக எனது இறுதி மூச்சு வரை பாடுபடுவேன். பாஜக வெல்ல வேண்டும். அதற்காக தொடர்ந்து உழைப்பேன்.  பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதே எனது ஒரே நோக்கமாகும். அது நடப்பதை நான் உறுதி செய்வேன்.

நான் மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன். இது எனது பிரியாவிடைப் பேச்சு. எனக்கு பேச அனுமதி அளித்த அனைவருக்கும் நன்றி என்றார் எதியூரப்பா. இந்த அறிவிப்பின் மூலம் கர்நாடக அரசியலின் மிக முக்கிய ஆளுமைகளில் ஒன்றின் அரசியல் செயல்பாடுகள் முடிவுக்கு வருகின்றன. அதேசமயம், இவரை விட மூத்தவரான முன்னாள் பிரதமர் தேவெ கெளடா இன்னும் தீவிர அரசியலில் இருக்கிறார், ராஜ்யசபா எம்.பியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதியூரப்பா 4 முறை கர்நாடக முதல்வராக இருந்துள்ளார். 3 முறை கர்நாடக எதிர்க்கட்சித் தலைவராக திகழ்ந்துள்ளார். இவரது மனைவி பெயர் மைத்ராதேவி. இந்தத் தம்பதிக்கு 3 மகள்கள் அருணாதேவி, பத்மாவதி, உமாதேவி, 2 மகன்கள்  - ராகவேந்திரா, விஜயேந்திரா உள்ளனர். மனைவி ஏற்கனவே இறந்து விட்டார்.

சமீபத்திய செய்திகள்

news

2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

news

ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்

news

தங்கம் நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் குறைவு... அதுவும் சவரனுக்கு ரூ. 1,200 குறைவு!

news

தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்

news

மக்களே உஷார்...இன்று இரவு கரையை கடக்கிறது மோன்தா புயல்

news

திருச்செந்தூரில் நடைபெறும் சாயா அபிஷேகம் பற்றி தெரியுமா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 28, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும் ராசிகள்

news

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!

அதிகம் பார்க்கும் செய்திகள்