டெல்லி: ஒய்.எஸ்.ஆர் ஷர்மிளா தான் நடத்தி வந்த ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை இன்று கலைத்து விட்டு, காங்கிரஸில் இணைந்து விட்டார். தெலங்கானாவில் ஏற்கனவே ஆட்சியைப் பிடித்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு சர்மிளாவின் வரவு புதுப் பலமாக அமைந்துள்ளது.
மறைந்த காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி. இவர் தனது தந்தை மறைவுக்குப் பின்னர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்து முதல்வராகவும் இருக்கிறார். இவரது தங்கைதான் சர்மிளா. ராஜசேகர ரெட்டி மறைவிற்கு பிறகு ஜெகன்மோகன் ரெட்டிக்குத் துணையாக இருந்து வந்தார் சர்மிளா. அவரது கட்சி வளர்ச்சிக்காக பாடுபட்டும் வந்தவர் ஒய்.எஸ்.ஆர்.ஷர்மிளா. ஆனால் பின்னர் ஜெக னுடன் கருத்து வேறுபாடு ஏற்படவே, ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை தொடங்கினார்.

சமீப காலமாக அவர் தனது அரசியல் வேகத்தை குறைக்கத் தொடங்கினார். மாறாக காங்கிரஸை நோக்கி தனது பார்வையைத் திருப்பி வந்தார். கடந்த நவம்பர் 3ஆம் தேதி திடீரென்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் சர்மிளா. தெலங்கானா சட்டசபைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாகவும் சர்மிளா அறிவித்திருந்தார். பிறகு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவும் தெரிவித்திருந்தார்.
தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. அப்போதே ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை காங்கிரஸ் உடன் இணைக்க போவதாக பேச்சுக்கள் எழுந்தன. இந்நிலையில் இன்று ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சியை காங்கிரஸில் இணைத்து தானும் அக்கட்சியில் இணைந்தார் சர்மிளா.

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் சர்மிளா. சர்மிளாவுக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து கார்க்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் சோனியா காந்தியையும் சர்மிளா நேரில் பார்த்து வாழ்த்து பெற்றார்.
சில மாதங்களில் ஆந்திரா சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒய்.எஸ்.ஆர் ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது ஜெகன் மோகன் ரெட்டிக்கு தர்மசங்கடமாகியுள்ளது. ஆந்திரா சட்டசபைத் தேர்தலில் சர்மிளாவை வைத்து ஜெகன் மோகன் ரெட்டிக்கு காங்கிரஸ் நெருக்கடி தரலாம் என்று எதிர்பார்க்க்படுகிறது. ஒரு வேளை அப்படி நடந்தால் பரபரப்பான அண்ணன் - தங்கச்சி சண்டையை ஆந்திராவில் எதிர்பார்க்கலாம். மறுபக்கம் சந்திரபாபு நாயுடுவும் முனைப்புடன் இருக்கிறார்.. இதனால் பலமுனை தாக்குதலை ஜெகன் மோகன் ரெட்டி சந்திக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவள்ளூருக்கு ஆரஞ்சு...சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்
தங்கம் நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் குறைவு... அதுவும் சவரனுக்கு ரூ. 1,200 குறைவு!
தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்
மக்களே உஷார்...இன்று இரவு கரையை கடக்கிறது மோன்தா புயல்
திருச்செந்தூரில் நடைபெறும் சாயா அபிஷேகம் பற்றி தெரியுமா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 28, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும் ராசிகள்
{{comments.comment}}