பச்சை கலருக்கு நோ... சிவப்பு கலருக்கு ஒகே சொன்ன சொமேட்டோ சிஇஓ... எதற்கு தெரியுமா?

Mar 20, 2024,04:06 PM IST

மும்பை: சொமேட்டோ நிறுவனம் சைவ உணவு டெலிவரி செய்வோருக்கு பச்சை நிற சீருடை மற்றும் பச்சை பை அறிமுகப்படுத்தியதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், அனைவரும் சிவப்பு நிற உடை அணிந்தே டெலிவரி செய்வார்கள் என அதன் தலைமை செயலதிகாரி தீபிந்தர் கோயல் விளக்கம் கொடுத்துள்ளார்.


இன்றைய இந்தியாவின் மிக முக்கியமான துறைகளில் ஒன்று ஆன்லைன் புட் டெலிவரி சேவை தான். ஆன்லைனில் மிகப்பெரிய உணவு டெலிவரி செயலியாக சோமேட்டோ இருந்து வருகிறது. சோமேட்டோ வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து உணவு டெலிவரி செய்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் சொமேட்டோ நிறுவனம் சைவ உணவு டெலிவரி செய்வோருக்கு பச்சை நிற உடை மற்றும் பச்சை பை அறிமுகப்படுத்தியது.




ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ 100 சதவீத சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர்களுக்கு pure veg mode மற்றும் pure veg fleet ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு பலவேறு தரப்பில் இருந்து  எதிர்ப்பு எழுந்தன. இந்நிலையில், சோமேட்டோ நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆகிய தீபிந்தர் கோயல் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அதில், உலகிலேயே இந்தியாவில் தான் சைவ உணவு உண்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்களிடம் இருந்து நாங்கள் பெற்ற முக்கியமான கருத்து என்னவென்றால், தங்கள் உணவு எப்படி சமைக்கப்படுகிறது, எப்படி கையாளப்படுகிறது என்பதில் அவர்கள் மிகவும் குறிப்பாக இருக்கிறார்கள். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப 100% உண்மை விருப்பமுள்ள வாடிக்கையாளர்களுக்காக சோமேட்டோ நிறுவனம்  pure veg mode மற்றும் pure veg fleetஐ இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. 


இந்த பியூர் வெஜ் மோடில் சுத்தமான சைவ உணவை மட்டுமே வழங்கும் உணவகங்கள் மட்டுமே இடம்பெறும்.

அசைவ உணவுகளை வழங்கும் எந்த ஒரு உணவகமும் இதில் இருக்காது. எங்களின் பிரத்யேக பியூர் வெஜ் ஆப்ஷனில் இந்த பியூர் வெஜ் உணவகங்களில் இருந்து பெறப்படும் ஆர்டர்களை மட்டுமே டெலிவரி செய்வார்கள். அதாவது அசைவ உணவு அல்லது சைவ உணவகம் வழங்கும் வெஜ் சாப்பாடு கூட எங்கள் பச்சை பியூர் வெஜ் பச்சை டெலிவரி பையில் செல்லாது. 


இந்த பியூர் வெஜ் மோட் அல்லது பியூர்வெஜ் ஆப்ஷன் என்பது எந்தவொரு மத அல்லது அரசியல் சார்பில் இல்லை. இது எந்த ஒரு மதத்தையும் அந்நியப்படுத்த எடுக்கப்பட்ட முடிவு இல்லை என்று தெரிவித்திருந்தார்.


இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் அதிகரித்த நிலையில் சோமேட்டோ  நிறுவனம் தனது அறிவிப்பில் இருந்து பின்வாங்கியுள்ளது. மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தீபிந்தர் கோயல். அதில், சைவ உணவு உண்பவர்களுக்கான சிறப்பு வசதியை அகற்ற முடிவு செய்துள்ளோம். எங்களின் சிவப்பு நிற சீருடை டெலிவரி பார்ட்னர்கள் அசைவ உணவுடன் தவறாக தொடர்பு கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்கிறோம்.  உங்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய நாங்கள் காத்திருக்கிறோம் என்று இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


என்னென்ன கதையெல்லாம் சொல்றாங்க பாருங்க!

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்