சென்னை: 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை நவம்பர் 4ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 2025-26ஆம் கல்வியாண்டுக்கான காலாண்டு தேர்வு நடந்து முடிந்துள்ளது. தற்போது அரையாண்டு தேர்வுக்கு மாணவர்கள் தங்களை தயார்ப்படுத்தி வருகின்றனர். மேலும், ஆசிரியர்களுக்கு அரையாண்டு தேர்வுக்கான பாடங்களை முடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
2025ஆம் ஆண்டு மாநில கல்விக் கொள்கையின் அடிப்படையில், தமிழகத்தில் 11ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெற்றது. அந்த பொதுத் தேர்வு இந்தாண்டு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 2025-26ஆம் கல்வியாண்டில் 10,12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், 2025-26ஆம் ஆண்டு 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணை 2025 அக்டோபர் மாதம் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், பொதுத்தேர்வு அட்டவனை வெளியாக வில்லை. தற்போது, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை குறித்து முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் கூறுகையில், 10,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை 2025 நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என்றும், நவம்பர் 4ஆம் தேதி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டடம் நடைபெறும். இதன் பிறகு 10,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
கொளத்தூர் எம்எல்ஏ., வி.எஸ்.பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சென்று விசாரித்த முதல்வர் விஜய்
தலைமைத் தேர்தல் ஆணையர் மீது எழுந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்
GEM Veeramani POCSO Case: ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை
ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய நிதியமைச்சகம் அதிரடி அறிவிப்பு
ஜெம் வீரமணி.. திமுக ஆட்சியில் வழக்கை நீர்த்துப் போகச் செய்தது கண்டனத்துக்குரியது - சீமான்
சர்வதேச சைகை மொழிகள் தினம்.. காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கான தினம்
பக்கத்தில்தான் மின்ஊழியர்கள் போராட்டம்.. அவர்களை ஏன் பார்க்கலை.. டிடிவி தினகரன் கேள்வி
Beautiful things don't ask for attention
There is always a way
{{comments.comment}}