சென்னை: வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கன மழை பெய்யக்கூடும் என்பதால் தமிழ்நாட்டிற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியது. இதனை தொடர்ந்து அநேக இடங்களில் இடங்களில் மிதமான மழை வரை பெய்து வந்தது. இதற்கிடையே வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கனமழையும் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்து வருகிறது. குறிப்பாக நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்நிலைகள் மற்றும் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
காவிரி ஆற்றுப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை எதிரொலியால் ஒகேனக்கல் ஆற்றில் வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியிலிருந்து 18,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் பத்தாவது நாளாக இன்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை நீடிக்கப்பட்டுள்ளது.
டெல்டா - மேற்கு மாவட்டங்களில் மழை
அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக பள்ளிபாளையத்தில் மட்டும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.இதனால் மாணவர்களின் நலன் கருதி இன்று பள்ளிப்பாளையத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார். அதேபோல் ஈரோடு மாவட்டத்தில் கருங்கல்பாளையம், சம்பத் நகர், வீரப்பன்சத்திரம், பன்னீர்செல்வம் பூங்கா உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் அதிகாலை முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதேபோல் புறநகர் பகுதிகளிலும் பரவலாக கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்தத் தொடர் மழை காரணமாக
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
25ம் தேதி புயல் கரையைக் கடக்கும்
இந்த நிலையில் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இது நாளை புயலாக வலுப்பெறும். இந்த புயலுக்கு கத்தார் நாடு பரிந்துரைத்த டாணா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த புயல் 24 ஆம் தேதி வடமேற்கு திசையில் நகர்ந்து வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒடிசா, மேற்கு வங்காளம் பகுதியை சென்றடையும்.
பின்னர் வரும் 25 தேதி அதிகாலை தீவிரப் புயலாக மாறி, ஒடிசாவின் பூரி மாவட்டம் மற்றும் மேற்கு வங்காளத்தின் சாகர் தீவு பகுதிகள் இடையே தீவிரப் புயலாகவே கரையை கடக்க கூடும். அப்போது சூறாவளிக்காற்று மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையே 120 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீச கூடும்.என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது 7 முதல் 12 சென்டிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்பதால் தமிழ்நாட்டிற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}