சென்னை: தமிழ்நாட்டில் இன்று 20 மாவட்டங்களுக்கும், நாளை 13 மாவட்டங்களுக்கும் மிதமானது முதல் கனமழை வரையிலான முன்னெச்சரிக்கையை இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வட கிழக்குப் பருவ மழையின் முதல் சுற்று முடிவடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக ஆங்காங்கு மழை காணப்படுகிறது. நாளை வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்படவுள்ளது. இது புயலாக மாறும் என்றும் இருப்பினும் இது தமிழ்நாட்டுக்கான புயல் இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று தொடங்கி 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
20ம் தேதி - இன்று கன மழை பெய்யக் கூடிய வாய்ப்புள்ள மாவட்டங்கள் - வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால்.
21ம் தேதி - ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் மயிலாடுதுறை.
22ம் தேதி - கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால்.
23ம் தேதி - கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்கள்.
24ம் தேதி முதல் 26ம் தேதி வரை- பெரிய அளவில் தமிழ்நாட்டுக்கு மழை இருக்க வாய்ப்பில்லை. லேசானது முதல் மிதமான மழையை மட்டும் எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர்களைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Trump Taxes: அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த புதிய வரிகள்...எந்தெந்த நாடுகளுக்கு அதிக பாதிப்பு?
பாரத் பந்த்.. நாளை நாடு தழுவிய அளவில்.. தொழிற்சங்கங்களின் போராட்டம்.. பாதிப்பு வரமா?
யாஷ் தயாள் இப்படியா செய்தார்?.. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பவுலர் மீது வந்த பகீர் புகார்!
பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: முக்கிய தலைவர்கள் இரங்கல்!
ஆனி மாத வளர்பிறை பிரதோஷம்.. சிவன் பார்வதி வழிபாட்டுக்கு உகந்த நாள்!
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல், அதிர்ச்சி!
நிலையற்ற விலையில் தங்கம்... நேற்று குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு!
கடலூர் அருகே விபரீதம்.. பள்ளி வேன் மீது ரயில் மோதி.. 3 பேர் பரிதாப பலி.. தவறு யார் மீது?
அமெரிக்காவில் பெரும் சோகம்.. சுற்றுலா சென்ற இந்தியர், மனைவி, 2 பிள்ளைகளுடன் விபத்தில் சிக்கி பலி
{{comments.comment}}