சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று கிராமிற்கு 40 ரூபாய் உயர்ந்து, ரூபாய் 8,980க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளில் ஒவ்வொரு விலையில் பயணித்து வருகிறது. அதன்படி, கடந்த 22ம் தேதி ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2200 அதிரடியாக உயர்ந்தது. பின்னர் அடுத்த நாளான 23ம் தேதி சவரனுக்கு ரூ.2200 குறைந்தது. அதனைதொடர்ந்து தங்கம் விலை குறைந்து வந்தது. அந்த வகையில் நேற்று ஒரு கிராமிற்கு ரூபாய் 62 குறைந்து 8,940 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இதனையடுத்து செல்வச் செழிப்பை அள்ளித் தரும் தினமான அட்சய திருதியை நாளை ஏப்ரல் 30ஆம் தேதி புதன்கிழமை வருவதால் ஒரு குண்டுமணி தங்கத்தியாவது வாங்க வேண்டும் என மக்கள் மக்கள் நினைப்பது வழக்கம். இதனால் தங்கத்தின் விலை மேலும் குறையும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இன்று மீண்டும் தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி ஆபரண தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராமிற்கு 62 ரூபாய் குறைந்து ரூபாய் 8,940க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராமிற்கு 40 ரூபாய் உயர்ந்து ரூபாய் 8,980க்கு விற்பனையாகிறது.
சென்னையில் இன்றைய (29.04.2025) தங்கம்

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூபாய் 40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8.980க்கு விற்பனையாகிறது.
அதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலை 44 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,797க்கும் விற்பனையாகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 71,840 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.89,800 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8,98,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,797 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.78,376 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.97,970ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,79,700க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,980 க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,797க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,995க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,812க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 8,980க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,797 க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,980க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,797க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,980 க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,797க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8.980க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,797க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,985க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,802க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய (29.04.2025) வெள்ளி விலை....
தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ள நிலையில், இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றம் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது.
அதன்படி, இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 111ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 888 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,110ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,100 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,11,000 ஆக உள்ளது.
குஜராத்தில்.. 30 நிமிடங்களாக இளைஞரை தரையில் அழுத்திப் பிடித்த சிங்கம் - பதறவைக்கும் வீடியோ
கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை
ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?
தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு
செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!
ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்
அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?
{{comments.comment}}