அதிசயம் ஆனால் உண்மை... இன்றைய தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு!

Feb 12, 2025,01:02 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 அதிரடியாக குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.63,520க்கு விற்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருகிறது. அதுவும் கடந்த 4ம் தேதியில் இருந்து நேற்று வரை தொடர்ந்து உயர்ந்தே வந்தது தங்கம் விலை. இதனால் வாடிக்கையாளர்களும் கவலை அடைந்திருந்தனர். அதுவும் குறிப்பாக தை மாதத்தில் விஷேசங்கள் வைத்திருந்தவர்கள் அதிகளவில் கவலை அடைந்து வந்தனர். இந்நிலையில், நேற்று வரை உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





சென்னையில் இன்றைய (12.02.2025) தங்கம் விலை....

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,940க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,667க்கும்
விற்கப்பட்டு வருகிறது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 63,520 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.79,400 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,94,000க்கு விற்கப்படுகிறது.

1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,667 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.69,336 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.86,670ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,66,700க்கு விற்கப்படுகிறது.

இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்

மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,940க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,667க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,955க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,682க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,940க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,667க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,940க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,677க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,940க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,677க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,940க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,677க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,672க்கும் விற்கப்படுகிறது.

முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...

குவைத் - ரூ.7,453
மலேசியா - ரூ.7,054
ஓமன் - ரூ. 7,727
சவுதி ஆரேபியா - ரூ.7,669
சிங்கப்பூர் - ரூ. 6,966
அமெரிக்கா - ரூ. 6,776
கனடா - ரூ.7,732
ஆஸ்திரேலியா - ரூ.6,821

சென்னையில் இன்றைய வெள்ளி விலை....

தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை கடந்த 5ம் தேதியில் இருந்து எந்தமாற்றமும் இன்றி அதே விலையிலேயே இருந்து வருகிறது.

ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 107 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 856 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1070 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,700 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,07,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை

news

முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு

news

முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது

news

கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை

news

இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?

news

‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை

news

10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

news

கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து

அதிகம் பார்க்கும் செய்திகள்