சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.66,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மார்ச் 12 முதல் 14ஆம் தேதி வரை தங்கம் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வந்தது. இதனைத் தொடர்ந்து மார்ச் 15ம் தேதி திடீர்ரென விலை குறைய ஆரம்பித்தது. அதாவது கிராமிற்கு ரூ.10 குறைந்தது. அதன்பின்னர் நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. பிறகு நேற்று மீண்டும் கிராமிற்கு ரூ.10 குறைந்தது.
இந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூபாய் 320 உயர்ந்து ஒரு சவரன் நகை ரூபாய் 66 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. மாசி மாதம் முகூர்த்த நேரம் என்பதால் தங்கத்தின் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்தனர்.
சென்னையில் இன்றைய (18.03.2025) தங்கம் விலை:

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு ரூபாய் 40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,250 வீதம், 8 கிராம் ரூபாய் 66 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் தங்கம் ரூபாய் 82,500 க்கும், 100 கிராம் தங்கத்தின் விலை 8,25,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 44 உயர்ந்து, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.9000 வீதம், 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை ₹ 72,000 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 10 கிராம் தங்கத்தின் விலை 90 ஆயிரத்திற்கும், 100 கிராம் தங்கத்தின் விலை 9 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்றைய (18.03.2025) வெள்ளி விலை:
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராமிற்கு ரூபாய் 1.10 காசுகள் உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை- ரூ.113
8 கிராம் வெள்ளி விலை- ரூபாய் 904
10 கிராம் வெள்ளியின் விலை- ரூ.1,130
100 கிராம் வெள்ளியின் விலை- ரூ.11,300
1000 கிராம் அதாவது ஒரு கிலோ வெள்ளியின் விலை- ரூ 1,13,000
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்:
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,250 க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9000க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,265 க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,015க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,250க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,000க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,250க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,000க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,250க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,000க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,250க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,000க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,255 க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,005க்கும் விற்கப்படுகிறது.
தமிழ் நாட்டில் பிறந்திட..... நம் தாயின் கருவறை.. வணங்கிட வேண்டும்....!
மரம் போல் உயரட்டும் மனித இனம்!
India win Women's world cup: அபார பீல்டிங்.. அட்டகாச பவுலிங்.. இந்திய மகளிருக்கு முதல் உலகக் கோப்பை!
SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக
SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
{{comments.comment}}