மகளிர் தினத்தை முன்னிட்டு.. நேற்று குறைந்திருந்த தங்கத்தின் விலை.. இன்று மீண்டும் உயர்வு!

Mar 08, 2025,11:45 AM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.64,320க்கு விற்கப்பட்டு வருகிறது.


தங்கம் விலை கடந்த சில நாட்களாக நிலையற்ற விலையில் இருந்து வருகிறது. எப்ப ஏறும், எப்ப இறங்கும்னு யாருக்கும் தெரியாது. அது ஏறும் போது ஏறும்,அது இறங்கும் போது இறங்கும் என்று சாமானிய மக்கள் தங்கம் விலையை குறித்து புலம்பி வருகின்றனர். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நகை விலை இன்று திடீர் என உயர்ந்துள்ளது. அதுவும் சவரனுகு்கு ரூ.400 உயர்ந்துள்ளது.


சென்னையில் இன்றைய (08.03.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,040க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,771க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 64,320 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.80,400 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.8,04,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,771 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.70,168 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.87,710ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.8,77,100க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,040க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,771க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,055க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,786க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,040க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,771க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,040க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,771க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,040க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,771க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,040க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,771க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,045க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,776க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.7,550

மலேசியா - ரூ.8,081

ஓமன் - ரூ. 7,859

சவுதி ஆரேபியா - ரூ.7,739

சிங்கப்பூர் - ரூ. 7,920

அமெரிக்கா - ரூ. 7,716

கனடா - ரூ.7,901

ஆஸ்திரேலியா - ரூ.7,891


சென்னையில் இன்றைய  (08.03.2025) வெள்ளி விலை....


தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.


ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 108.10ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 864.80 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1081 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,810 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,08,100 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

news

கடந்த 2 நாட்களாக அமைதியாக இருந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்தது... எவ்வளவு குறைவு தெரியுமா?

news

ஆலயம் தொழுவது சாலவும் நன்று.. அவ்வளவு நன்மைகள் உள்ளன கோவிலுக்கு செல்வதில்!

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

அதிகம் பார்க்கும் செய்திகள்