சென்னை:2026 சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து டிசம்பருக்குப் பின்னரெ தவெக முடிவெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சினிமாவில் உச்ச நடிகரான விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். இக்கட்சி தொடக்கத்திலிருந்து 2026 ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலை எதிர்கொண்டு பல்வேறு பணிகளை தீவிரமாக செய்து வருகிறார். அதேபோல் கட்சி அறிவிக்கும் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்வதற்காக பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகிறார். மேலும் கட்சியை வலுப்படுத்துவதற்காக கட்சியின் ஒவ்வொரு நிகழ்வையும் ஆழமாக யோசித்து விஜய் செயல்படுத்தி வருகிறார்.
கட்சியின் முதல் மாநாடு தொடங்கி சமீபத்தில் நடந்த கட்சியின் பொதுக் குழு கூட்டம் வரை அனைவரையும் கவரும் விதத்தில் செய்து வருகிறார் விஜய். சமீபத்தில் நடந்த பொழுக்குழு கூட்டத்தில் விஜய் பேசுகையில், தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர். இன்னைக்கு தமிழ்நாடு இருக்கிற சூழலில் நாம் ஒரு புதிய வரலாற்றை படைப்பதற்கு தயாராக வேண்டிய அவசியத்தை நீங்கள் எல்லோரும் நிச்சயமாக புரிந்து வைத்துக் கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். அரசியல்னா என்னங்க. ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழனும் என்று நினைக்கிற அரசியலா, இல்லை ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நல்லா வாழனுங்கிறது அரசியலா நீங்களே சொல்லுங்க. எல்லோருக்கும் நல்லது நடக்கிறது தானே அரசியல். அதுதான் நம் அரசியலும்.
காட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல்னு தினம் தினம் மக்கள் பிரச்சனைகளை மடைமாற்றி மக்கள் விரோத ஆட்சியை மன்னர் ஆட்சி போன்று நடத்துகின்ற நம்மளுக்கு எதிராக இவர்கள் செய்கின்ற செயல் ஒன்றா இரண்டாங்க. மாநாட்டில் ஆரம்பித்து அதுக்கப்புறம் நான் கலந்து கொண்ட புத்தக வெளியீட்டு விழா, பரந்தூர் விசிட், இரண்டாம் ஆண்டு துவக்க விழா என்று அன்றைக்கெல்லாம் சிட்டிக்குள்ள எந்த ஹாலும், மண்டபமும் கொடுத்து விடக்கூடாது என்று மகாபலிபுரத்தில் கொண்டாடினோம். இன்றைக்கு பொதுக்குழு வரைக்கும் எங்கெல்லாம் எப்படி எல்லாம் தடைகள் . ஆனால் அத்தனை தடைகளையும் தாண்டி நம்முடைய தோழர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது தொடர்ந்து நடக்கும். எல்லோரும் போட்டு அடி அடின்னு அடிக்கிறாங்க என்று வெளிபடையாக பேசியிருந்தார். அதுமட்டும் இன்றி தான் எதிர்க்கும் கட்சி குறித்தும், கட்சியின் தலைவர் குறித்தும் பேசியிருந்தார.
இந்த நிலையில், தற்போது பூத் கமிட்டி நியமிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான ஏற்பாடுகளை விஜய் தீவிரமாக செய்து வருகிறார். கோவையில் வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் நடக்கும் தவெக பூத் கமிட்டி உறுப்பினர்கள் கருத்தரங்கில் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மக்களை சந்திக்கும் விஜய்யின் பயணம் முடிந்த பின்னரே, கட்சியின் கூட்டணி குறித்த முடிவு தெரியவரும் என்றும், அநேகமாக வரும் டிசம்பருக்கு பின்னர் தெரிய வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் தலைமையில் மட்டுமே கூட்டணி என்பதில் தவெக உறுதியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
Gold rate: எந்த மாற்றமும் இல்லை.. நேற்றைய நிலையிலேயே.. இன்றைய தங்கம் விலை!
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
Box office: தமிழ்நாட்டில் குட் பேட் திரைப்படத்தின் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா..?
பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்க.. புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.. மெட்டா நிறுவனம்
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
தமிழ்நாட்டில்.. இன்று மழையும், வெயிலும் இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்!
காஷ்மீர் beautiful காஷ்மீர்.. தீவிரவாதிகள் சீரழிக்க நினைக்கும் காஷ்மீரின் பேரெழிலும் இயற்கை அழகும்!
ஒவ்வொரு பயங்கரவாதியையும், அவர்களுக்கு உதவுபவர்களையும் வேரறுப்போம்.. பிரதமர் மோடி ஆவேசம்
{{comments.comment}}