திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அவிநாசிபாளையம் சேமலைகவுண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தெய்வசிகாமணி. இவரது மனைவி பெயர் அலமாத்தாள். இந்தத் தம்பதி தங்களது தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர். இவர்களது மகன் செந்தில் குமார். ஐடி ஊழியரான இவர் தனது குடும்பத்துடன் கோவையில் வசித்து வருகிறார்.
செந்தில் குமார் உறவினர் ஒருவருக்கு பெண் பார்ப்பதற்காக கோவையில் இருந்து நேற்று மாலை பல்லடத்தில் உள்ள தனது தாய், தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். 3 வரும் சேமலைகவுண்டம்பாளைய கிராமத்து தோட்டத்து வீட்டில் இரவு படுத்திருந்தனர். அப்போது இரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேரையும் அடித்து படுகொலை செய்துள்ளனர். இன்று காலையில் அவர்களது வீட்டிற்கு சென்ற சவரத் தொழிலாளி மூவரும் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தடவியல் நிபுணர்கள் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்தனர். இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் நகைக்காக மூவரும் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
நேற்று நள்ளிரவில் அங்கு வந்த கொள்ளையர்கள் 3 பேரையும் அரிவாளா ல் வெட்டிக்கொன்று விட்டு நகை பணத்தை எடுத்து சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்த மர்மநபர்கள் யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூரமாக இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த கொலையில் 5 பேர் ஈடுபட்டிருக்கலாம் என்றும், அவர்கள் அரிவாள் மற்றும் இரும்பு ராட் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று தடயவியல் நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது கொலையாளிகளைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
தலைவர்கள் கண்டனம்
இந்த படுகொலைச் சம்பவம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பிறந்தது புத்தாண்டு.. இந்தியா முழுவதும் கொண்டாட்டம்.. மக்கள் மகிழ்ச்சி வெள்ளம்
100 கோடி நன்கொடை! கான்பூர் ஐஐடி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!
டிக் டிக் டிக்... கடிகாரம் மாட்டும் திசையை வைத்து வீட்டின் நன்மைகள் இருக்காம்... இதோ முழு விபரம்!
தானத்தில் சிறந்த தானம் எது தெரியுமா?
கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு
எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி
முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்
திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?
உலகில் புத்தாண்டு முதலில் பிறக்கும் நாடு... கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடு எது தெரியுமா?
{{comments.comment}}